செவ்வாய், 7 மே, 2013

‘திரைப்படம் பார்க்கலாம் வாங்க’

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தமிழ்ப் பாடவேளையின்போது, மான்ஸ்டர் இங் (Monster Inc.) என்ற திரைப்படத்தைத் தமிழில் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆங்கிலத்தில் அந்தத் திரைப்படத்தைச் சில மாணவர்கள் பார்த்திருந்தாலும், மொழி மாற்றம் செய்யப்பட்டுத் தமிழில் பார்க்கும்போது வேறு படம் போல் வித்தியாசமாக இருப்பதாகச் சில மாணவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இன்னும் சிலர் தமிழில் இதுபோல் திரைப்படம் பார்ப்பது மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பதாகக் கூறினர். மொத்தத்தில், தமிழில் திரைப்படம் பார்ப்பது மாணவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக