திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2015

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) 14 ஆகஸ்ட் 2015 அன்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் நடன அறையில் ஒன்றுகூடினர். தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் அன்றைய கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டு தமிழ் மாணவர்கள் தாங்கள் பங்குபெற்ற தமிழ்மொழி நடவடிக்கைகள் பற்றிய தங்கள் அனுபவங்களை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் இந்தக் கூட்டம் அமைந்தது. மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


வெள்ளி, 29 மே, 2015

'கனவு நனவாகிறது' 2015



27 மே அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களான திரிஷா, நூர், யாஷிக்கா, பிரதோஷ், இப்ராஹிம், ஷஃபிக் ஆகியோர் கனவு நனவாகிறது 2015 என்ற போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்துப் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் ஒரு கடையை அமைத்து, எழுதுபொருட்களை விற்பதோடு அவர்களின் கடையைப் பற்றி அவர்கள் விளம்பரமும் செய்யவேண்டியிருந்தது. 

‘ஐ கடை என்று தங்கள் கடைக்குப் பெயர் சூட்டி, அவர்களின் கடையைப் பற்றி நம் பள்ளி மாணவர்கள் அபாரமாக விளம்பரம் செய்தார்கள். போட்டியின் இறுதியில், அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிட்டியது. அந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்! 

போட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


செவ்வாய், 26 மே, 2015

தொடக்கநிலை 4 தமிழ் முகாம் 2015

25 மே 2015 அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் மொழி மற்றும கலச்சார நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, பல புதிய வி‌ஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். முகாமின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:



செவ்வாய், 31 மார்ச், 2015

கருத்துரைக்கலாம் வாங்க!

வணக்கம் மாணவர்களே!

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின் போது, நீங்கள் பங்குபெற்ற ஐ-திரை பயிலரங்கு பற்றி உங்கள் கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவிக்கலாம். 

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

செய்தி எழுதுவது எப்படி?

அன்பார்ந்த தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,


சென்ற வாரம் செய்தி எழுதுதல் பற்றிய பாடம் வகுப்பில் நடத்தப்பட்டது. அந்தப் பாடத்தைக் குறித்த உங்கள் பிரதிபலிப்புகளை இங்குப் பதிவு செய்யுங்கள்! 








வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சொற்போர் 2015 தேர்வுச்சுற்று

07/02/2015 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2015 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்று தொடங்கியது. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். 

ரியாஸ் (6S), ஃபைரோசா (6R), தேவ்ராஜ் (6S)
ராம்குமார் (5S), கிருபன் (5S)
இன்றைய பெற்றோர்கள் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு எனும் மனப்போக்கில் பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுக்கின்றனர்’ என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள். 


நம் பள்ளி மாணவிஃபைரோசா (6R) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!

வெள்ளி, 9 ஜனவரி, 2015

2015 வருக! வருக!

புதிய ஆண்டு பிறந்துவிட்டது!
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபடும் நேரமும் தொடங்கிவிட்டது.
இவ்வாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பான ஒரு கல்வி ஆண்டாக அமைய எங்களின் நல்வாழ்த்துக்கள்!