திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

18/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுமி மேளக் குழுவினர்களின் இசைக் கச்சேரியையும் பொய்க்கால் குதிரைகளின் ஆட்டத்தையும் கண்டு களித்தனர். அத்துடன், மாணவர்கள் உறுமி மேளம், பொய்க்கால் குதிரை என்ற இவ்விரு பாரம்பரிய கலைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். மாணவர்கள் உறுமி மேளக் கருவிகளை இசைத்தும் பொய்க்கால் குதிரைகளைத் தொட்டும் பார்த்தனர். இக்கலை நிகழ்ச்சி மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்தது எனலாம். கலை நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 

 

 

 

 

 


கற்றல் பயணம்

17/04/2012 அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஃபோர்ட் கென்னிங் (Fort Canning) பூங்காவுக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டனர். மாணவர்கள் பூங்காவின் வரலாற்றை அறிந்ததோடு அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் நடவடிக்கைகளிலும் தங்கள் குழுக்களில் மிகுந்த ஆர்வத்தோடு பங்குபெற்றனர். அப்பூங்காவில் தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது எனலாம். கற்றல் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

 

 

 

 

 

நாடகப் பட்டறை

16/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள நாடகப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் அதில் நாடகத்தின் கூறுகள் சிலவற்றையும் நாடக உத்திகள் பற்றியும் கற்றுக்கொண்டார்கள். பட்டறையின் இறுதியில், மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஒரு சில கதாபாத்திரங்களைப் போல் பாத்திரமேற்று நடித்துக் காட்டினர். இந்நாடகப் பட்டறை மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பயனும் அளித்தது எனலாம். பட்டறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 





 

 

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மின்மினிகள் 2012

S2 குழுமப் பள்ளிகள் முதன்முதலாக மின்மினிகள் 2012 என்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இது 12 ஏப்ரல் 2012 அன்று கெண்டமன் தொடக்கப்பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்மொழி போட்டிகள் நடைபெற்றன. நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றனர்.
 

 

 






பாட்டுப்போட்டியில் 1 Opal வகுப்பைச் சேர்ந்த முகமது ஷஃபிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
 





பாத்திரம் ஏற்று நடித்தல் போட்டியில் 2 Opal வகுப்பின் ராம்குமாருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
 






கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்ற 3 Topaz வகுப்பைச் சேர்ந்த ரியாஸ்க்கும் நாடகப்போட்டியில் பங்குபெற்ற 4 Ruby வகுப்பைச் சேர்ந்த ஜீவிதா மற்றும் டிவாஷினி ஆகிய இருவருக்கும் ஆறுதல் பரிசு கிடைத்தது.
 







பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற 5 Sapphire வகுப்பைச் சேர்ந்த ஜோஷிகாவுக்கு இரண்டாம் பரிசும் விளம்பரப் போட்டியில் பங்குபெற்ற 6 Sapphire வகுப்பைச் சேர்ந்த தஜ்மிலுக்கு முதல் பரிசும் கிடைத்தன.

 





பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நம் அனைவருடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.