சனி, 13 ஆகஸ்ட், 2016

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2016

இவ்வாண்டின் இரண்டாம் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) 12 ஆகஸ்டு 2016 அன்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளியின் நடன அறையில் ஒன்றுகூடினர். 

இந்த ஆண்டின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பைக் கொண்ட ஒளிக்காட்சி ஒன்று மாணவர்களுக்குக் காட்டப்பட்டது. சில மாணவர்கள் தாங்கள் பங்கேற்ற நடவடிக்கைகள் பற்றியும் அவற்றில் அவர்களுடைய அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்.

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற பட்டறைகளில் மாணவர்கள் படைத்த படைப்புகளைக் கொண்ட ஒளிக்காட்சிகளும் மாணவர்க்கூட்டத்தின் போது காட்டப்பட்டன.


மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 



இவ்வாண்டு பள்ளியில் நடைபெற்ற தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்;



வியாழன், 4 ஆகஸ்ட், 2016

கடிகாரம் செய்து பார்க்கலாம்!


#தொடக்கநிலை1&2        #தமிழ்வகுப்பு      # மகிழ்ச்சியானவகுப்பு

வெள்ளி, 29 ஜூலை, 2016

சொல் விளையாட்டு!




#தொடக்கநிலை1தமிழ்வகுப்பு      # மகிழ்ச்சியானவகுப்பு

வியாழன், 28 ஜூலை, 2016

இலக்கியப் பட்டறை

தேசியக் கல்விக் கழகமும் தேசியக் கலைகள் மன்றமும் இணைந்து நடத்தும் ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி உடனிருந்து பயிற்றுவித்தல்’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக படைப்பாக்கத் திறன் மேம்பாட்டிற்கான இலக்கியப் பட்டறை ஒன்று 28 ஜூலை 2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தப் பட்டறையில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான நூர் (5T) மற்றும் தனிஷ்கா (5R) கலந்துகொண்டார்கள். 


இந்தப் பட்டறையைப் பிரபலத் தமிழ் எழுத்தாளரான திரு.ஜெயமோகனும் சிங்கப்பூர் எழுத்தாளரான குமாரி.கனகலதாவும் வழிநடத்தினார்கள். பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள் எழுத்தாளர்களிடமிருந்து படைப்பாக்கத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் தரமான இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கும் தேவைப்படும் உத்திகளை அறிந்துகொண்டார்கள்.

திங்கள், 18 ஜூலை, 2016

இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் 2016

இவ்வாண்டு நம் பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் ஜூலை மாதம் 18-ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 29-ஆம் வரை நடைபெறுகின்றன. அதைப் பற்றிய மேல் விவரங்களை அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்பைக் 'கிலிக்' செய்யுங்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

வாங்க விளையாடலாம்!


 #தொடக்கநிலை 5             #தமிழ்வகுப்பு            #மகிழ்ச்சியான வகுப்பு       
#எழுவாய்-பயனிலை பாடம்

செவ்வாய், 31 மே, 2016

கட்டுரைப் பயிலரங்கு 2016

அரையாண்டு விடுமுறை வகுப்புகளின்போது, தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்காகத் தமிழ்க் கட்டுரைப் பயிலரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 


மாணவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு கட்டுரையை இன்னும் சிறப்பாக எழுதுவதற்கான உத்திகளை அறிந்துகொண்டனர். பயிலரங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


புதன், 25 மே, 2016

வெற்றி வாகை சூடிய மாணவர்கள்


இவ்வாண்டு பள்ளிப் பருவத்தின் முதல் பாதியில் நடத்தப்பட்ட தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்!!!! 

திங்கள், 23 மே, 2016

'கனவு நனவாகிறது' 2016


20 மே அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களான காவியா, இனியா, மஃவுசா, சைனப், ஹெம்ராஜ், டிவேஷ் ஆகியோர் கனவு நனவாகிறது 2016 என்ற போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்துப் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் ஒரு கடையை அமைத்து, எழுதுபொருட்களை விற்பதோடு அவர்களின் கடையைப் பற்றி அவர்கள் விளம்பரமும் செய்யவேண்டியிருந்தது. 

‘வி.ஐ.பி கடை என்று தங்கள் கடைக்குப் பெயர் சூட்டி, அவர்களின் கடையைப் பற்றி நம் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளம்பரம் செய்தார்கள். போட்டியின் இறுதியில், அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிட்டியது. அந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்! 

போட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 



வெள்ளி, 20 மே, 2016

எங்கள் முதல் கூட்டு முயற்சி


பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவும் கல்வி அமைச்சின் பிளாங்கா ரைஸ் பாலர் பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவும் இணைந்து 19 மே 2016 அன்று ஒரு கூட்டு முயற்சியில் இணைந்தன. 

பாலர் பள்ளி தமிழ் மாணவர்களும் தொடக்கப்பள்ளி ஒன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களும் ஒன்று சேர்ந்து இந்தக் கூட்டு முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியதோடு அவர்கள் ஓன்றுசேர்ந்து சில நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டனர். 

அந்த நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 





திங்கள், 16 மே, 2016

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2016

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) 13 மே 2016 அன்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் நடன அறையில் ஒன்றுகூடினர். 

இந்த ஆண்டு நடத்தப்பட்ட தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்கள் தங்கள் படைப்புகளை மற்ற மாணவர்களிடம் படைக்கும் வண்ணம் இந்தக் கூட்டம் அமைந்தது. 

மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


சனி, 2 ஏப்ரல், 2016

தமிழ்மொழி விழா 2016 தொடங்கிவிட்டது!

தமிழ்மொழி விழா 2016 தொடங்கிவிட்டது. 

இவ்வாண்டு இவ்விழா 2 ஏப்ரல் 2016 தொடக்கம் 30 ஏப்ரல் 2016 வரை தீவு முழுக்க அனுசரிக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தீவு முழுவதும் தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் வண்ணம் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் விழாவைப் பற்றிய மேல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும் http://tamil.org.sg/ta என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்! 

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்! 

வெள்ளி, 4 மார்ச், 2016

கதை கேட்போம் வாங்க!

தொடக்கநிலை ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்காகக் கதைசொல்லும் நிகழ்ச்சி ஒன்று இம்மாதம் 3-ஆம் தேதி அன்று பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருமொழியில் கதை சொல்பவரும் நாடகக் கல்வியாளருமான கிரேஸ் கலைச்​செல்வி பேரிடரிலிருந்து ஒரு நாளைக் காக்கும் சுவாரசியமான பயணத்தில் தம் கைப்பாவைகளோடு நம் மாணவர்களை அற்புதமாகக் கொண்டு சென்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் தங்கள் சொந்த கைப்பாவைகளைச் செய்து மகிழ்ந்தார்கள். 





வியாழன், 3 மார்ச், 2016

என் கேள்விக்கு என்ன பதில்?





#தொடக்கநிலை 5             #தமிழ்வகுப்பு            #மகிழ்ச்சியான வகுப்பு       #கருத்தறதில் பாடம்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

கைக்கணினியில் தமிழ்ப்பாடங்கள்



#தொடக்கநிலை 5             #தமிழ்வகுப்பு            #மகிழ்ச்சியான வகுப்பு

சனி, 20 பிப்ரவரி, 2016

தமிழ்மொழி கற்றல் விழா

பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி அன்று தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்கள் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்மொழி கற்றல் விழாவில் பங்கு பெற்றார்கள். விழாவில் நடைபெற்ற அனைத்து அங்கங்களும் நடவடிக்கைகளும் மாணவர்கள் தமிழ்மொழியைப் பற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியும்  மேலும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்தன. 

அதோடு நம் மாணவர்கள் மற்ற பள்ளிகளிலிருந்து வந்த தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுடன் நட்புகொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் இந்த விழா வாய்ப்பு அளித்தது. மொத்தத்தில் விழாவில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த விழா ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது எனலாம். 

அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 



செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தமிழ்த் தட்டச்சு வகுப்புகள்




#தொடக்கநிலை 3       #தமிழ்வகுப்பு       #தட்டச்சுச்செய்யலாம்வாங்க!

வியாழன், 4 பிப்ரவரி, 2016

கட்டியங்காரன் மாணிக்கம்

4-ஆம் தேதி பிப்ரவரி மாதம் அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கட்டியங்காரன் மாணிக்கம் என்ற நாடகம் ஒன்றைக் காண சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் நாடகத்தைக் கண்டு களித்ததோடு, வெவ்வேறு நாடக வடிவங்களைப் பற்றியும் அறிந்துகொண்டார்கள். அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 




புதன், 3 பிப்ரவரி, 2016

செய்து பார்ப்போம் வாங்க!



#தொடக்கநிலை1தமிழ்வகுப்பு      # மகிழ்ச்சியானவகுப்பு

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பெற்றோர்ப் பயிலரங்கு 2016

2-ஆம் தேதி பிப்ரவரி மாதம் அன்று தொடக்கநிலை ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்காகப் பெற்றோர்ப் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ்மொழிப் பயிலரங்கின் போது பெற்றோருக்குத் தமிழ்ப் பாடங்கள், தமிழ் வகுப்பில் நடக்கும் நடவடிக்கைகள், தமிழ்த் தேர்வுகள், முழுமை மதிப்பீடு, வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம் போன்ற பல தகவல்கள் வருகை தந்த பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.