செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! - 1 விடை

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! முதல் புதிரில் உங்களில் பல மாணவர்கள் பங்குபெற்று உங்கள் பதில்களைக் கருத்துரை செய்திருக்கிறீர்கள். பங்குபெற்ற அனைத்து மாணவர்களின் முயற்சிக்கும் எங்களின் பாராட்டுகள்!

உங்களில் பலரிடமிருந்து பல வித்தியாசமான பதில்கள் வந்திருந்தாலும் சரியான பதில் என்று ஒன்று தான் இருக்கமுடியும். அது என்ன பதில்?

சரியான பதில்:
அறை 3. 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் இறந்திருக்கும். அதனால் குற்றவாளி அந்த அறையில் இறந்து கிடந்த சிங்கங்களுடன் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்தான்.

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! முதல் புதிரில் மூன்று மாணவர்கள் சரியான பதில்களைக் கருத்துரை செய்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1.  முஹ்சின் (6 Topaz)
2.  டையனா (6 Topaz)
3.  அஃபில் (6 Topaz)

சரியான பதிலைக் கண்டுபிடித்து கருத்துரை செய்த இம்மூன்று மாணவர்களுக்கும் எங்களின் பாராட்டுகள்! ஆனால் முதலில் கருத்துரைத்த முஹ்சின் மற்றும் டையனா ஆகிய இரண்டு மாணவர்களுக்கும் தான் பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. விரைவில் அப்பரிசுகள் உங்களைத் தேடி வரும்.

மற்ற மாணவர்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்! அடுத்த எப்படி? எப்படி? அப்படி! அப்படி! புதிரில் முயற்சி செய்து பாருங்கள்!

அடுத்த புதிர் விரைவில்... எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

திங்கள், 28 ஏப்ரல், 2014

காட்டிப் பேசுதல் பயிலரங்கு

இவ்வாண்டு பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களைக் காட்டிப் பேசுதல் பயிலரங்கு ஒன்று முடித்து வைத்தது. இது தொடக்கநிலை ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. 11 ஏப்ரல் 2014 அன்று நடைபெற்ற இப்பயிலரங்கில் மாணவர்களுக்கு காட்டிப் பேசுதல் திறன்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தவது பற்றியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:






















தடயம்!

8 ஏப்ரல் 2014 அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காகத் தடயம் என்ற ஒரு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் தமிழை ஆர்வத்தோடு கற்றுக்கொள்வதோடு மாணவர்களிடையே குழு உணர்வை வளர்க்கவும் இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின் போது, பள்ளியைச் சுற்றி வெவ்வேறு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தடயத்தைக் கொண்டு, தாங்கள் செல்ல வேண்டிய அடுத்த நிலையத்தைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் அனைவரும் இந்நடவடிக்கையில் உற்சாகத்துடனும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டும் செயல்பட்டார்கள். இந்நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: