வியாழன், 27 டிசம்பர், 2012

தீபாவளிக் கொண்டாட்டங்கள் 2012

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 12/11/2012 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது பலதரப்பட்ட அங்கங்கள் படைக்கப்பட்டன. மாணவர்களின் படைப்புகளுடன் தீபாவளி பற்றிய முக்கியத் தகவல்களும் கலைநிகழ்ச்சியின் போது விளக்கப்பட்டன. மொத்தத்தில், இவ்வாண்டின் தீபாவளிக் கலைநிகழ்ச்சி பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவன், மணிகண்டன் மிருதங்கம் இசைக் கருவியை வாசித்துத் தீபாவளிக் கலைநிகழ்ச்சியைப் பிரமாண்டத்துடன் தொடங்கி வைத்தான். அவனின் மிருதங்க இசை அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தது.

 








நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களின் நடனம் அனைவரையும் தாளம் போட வைத்தது.
 
 



 




நிகழ்ச்சியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் படைத்த துடுப்புமிக்க நடனமும்  அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 


புதன், 31 அக்டோபர், 2012

தொடக்கநிலை ஆறாம் வகுப்புக்கான தமிழ்மொழி முகாம்

31/10/2012 அன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்மொழி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. ‘2.5 மணி நேர அட்டகாசம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அம்முகாமில் மாணவர்கள் தமிழ்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். அது மட்டும் ரகசியம்’, தமிழில் என்ன?’, பேசக்கூடாது’, நடித்துப் பார்க்கலாம் வாங்க போன்ற பல நடவடிக்கைகள் மாணவர்களுக்காக நடத்தப்பட்டன. மாணவர்களும் இந்த நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு பங்குபெற்றார்கள். இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் தமிழார்வத்தை வளர்த்ததோடு அவர்களிடையே உள்ள குழு உணர்வையும் வளர்க்க உதவின எனலாம்.

அம்முகாமின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:


 

 

 

 

 
 






ஞாயிறு, 7 அக்டோபர், 2012

நான் படித்த கதை

தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களே!

நீங்கள் படித்த கதையை வலைப்பூவில் பகிர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது! இப்போதே நீங்கள் படித்த கதையைப் பற்றிக் கருத்துத் தெரிவியுங்கள்!

புதன், 26 செப்டம்பர், 2012

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

 
தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.

'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புத்தான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே! தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.

புதன், 4 ஜூலை, 2012

வாங்க கருத்துரைக்கலாம்


பெருவிரைவு ரயிலில் இந்தச் சின்னம் தேவையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாங்க கருத்துரைக்கலாம்!

புதன், 9 மே, 2012

வாங்க கருத்துரைக்கலாம்!

நாம் பல பாடல்களை வானொலியிலும் இணையத்திலும் கேட்டிருக்கலாம். ஆனால், அவ்வாறு நாம் கேட்ட பாடல்களில் ஒரு சில வரிகள் மட்டும் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும். அதுபோல் உங்கள் மனங்களில் இடம்பிடித்த வளமான வரிகள் ஏதேனும் உள்ளதா? வாங்க கருத்துரைக்கலாம்!

திங்கள், 7 மே, 2012

மொழி விளையாட்டுகள்

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக மொழி விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு வகுப்பு மாணவர்களும் முதலில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். பின், அவர்களுக்கு இரு படங்களுக்கான படத்துண்டுகள் கொடுக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் குழுக்களில் கொடுக்கப்பட்ட படத்துண்டுகளைச் சரியாக இணைத்துப் படத்தில் உள்ள பறவை, விலங்கு என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். அனைத்து மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தங்கள் குழுக்களில் அப்படத்துண்டுகளைச் சரியாக இணைக்க முற்பட்டனர். பின்னர், மாணவர்கள் அந்த உயிரினங்களின் பெயர்களை ஒரு தாளில் எழுதி, அவற்றைப் பற்றி உரையாடினார்கள். அம்மொழி நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 

 

 

 

திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

18/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுமி மேளக் குழுவினர்களின் இசைக் கச்சேரியையும் பொய்க்கால் குதிரைகளின் ஆட்டத்தையும் கண்டு களித்தனர். அத்துடன், மாணவர்கள் உறுமி மேளம், பொய்க்கால் குதிரை என்ற இவ்விரு பாரம்பரிய கலைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். மாணவர்கள் உறுமி மேளக் கருவிகளை இசைத்தும் பொய்க்கால் குதிரைகளைத் தொட்டும் பார்த்தனர். இக்கலை நிகழ்ச்சி மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்தது எனலாம். கலை நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 

 

 

 

 

 


கற்றல் பயணம்

17/04/2012 அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் ஃபோர்ட் கென்னிங் (Fort Canning) பூங்காவுக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டனர். மாணவர்கள் பூங்காவின் வரலாற்றை அறிந்ததோடு அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் நடவடிக்கைகளிலும் தங்கள் குழுக்களில் மிகுந்த ஆர்வத்தோடு பங்குபெற்றனர். அப்பூங்காவில் தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது எனலாம். கற்றல் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: