கருத்துரைப்பது எப்படி?


மாணவர்களே, உங்கள் பதில்களை நீங்கள் எவ்வாறு இடுகையுடன் இணைப்பது குறித்து உதவி வேண்டுமா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்காகச் சில குறிப்புகள்.

1. முதலில் "No comments" என்பதைக் கிலிக் செய்யவும்.


கீழ்க்காணும் படிவம் தோன்றும்.



2. அடுத்து. கேள்விக்கான பதிலை "Leave a Reply" பெட்டியினுள் தட்டச்சு (type) செய்யவும்.


3. பின், "இவ்வாறு கருத்துரையிடு" என்னும் பகுதியைக் கிலிக் செய்து, "பெயர்/URL" என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.


4. கீழ்க்காணும் படிவம் தோன்றும். உங்கள் பெயரை தட்டச்சு செய்த பின், உங்கள் வகுப்பை அடைப்புக்குறியினுள் தட்டச்சு செய்யவும். "URL" பகுதியில் எதுவும் தட்டச்சு செய்ய வேண்டாம்.


5. இறுதியில், "கருத்துரை சேர்" என்பதைக் கிலிக் செய்ய வேண்டும். உங்கள் விடைகள் முதலில் ஆசிரியர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகே, இடுகையுடன் இணைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் உதவி தேவைப்பட்டால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.