செவ்வாய், 7 மே, 2013

‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’

08/04/2012 அன்று பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்க்கூட்ட வேளையின் போது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுமி மேளக் குழுவினர்களின் இசைக் கச்சேரியையும் மயிலாட்டத்தையும் கண்டு களித்தனர். அத்துடன், மாணவர்கள் உறுமி மேளம், மயிலாட்டம் என்ற இவ்விரு பாரம்பரிய கலைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். மாணவர்கள் உறுமி மேளக் கருவிகளை இசைத்தும் மயிலாட்ட அசைவுகளைச் செய்தும் பார்த்தனர். இக்கலை நிகழ்ச்சி மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்தது எனலாம். கலை நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
  

 

 


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக