வெள்ளி, 15 நவம்பர், 2013

தீபாவளிக் கொண்டாட்டங்கள் 2013

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 01/11/2013 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது பலதரப்பட்ட அங்கங்கள் படைக்கப்பட்டன. ஆடல், பாடல் என்று மாணவர்களின் படைப்புகளுடன் தீபாவளி பற்றிய முக்கியத் தகவல்களும் கலைநிகழ்ச்சியின் போது விளக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!






புதன், 30 அக்டோபர், 2013

கண்டுபிடி! கண்டுபிடி!

கீழே கொடுக்கப்பட்ட இரண்டு படங்களில், மொத்தம் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து, உங்கள் விடையை இந்த இடுகையுடன் இணையுங்கள் (comments)! அவ்வாறு செய்யும்போது, உங்கள் பெயரையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்!



சனி, 24 ஆகஸ்ட், 2013

நண்பனே! எனது உயிர் நண்பனே!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,

பின்வரும் பாடல் பகுதியை நீங்கள் உங்கள் தமிழ் வகுப்பில் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் பகுதியை மீண்டும் கேளுங்கள். கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளைச் செய்து முடியுங்கள்.

சனி, 27 ஜூலை, 2013

நம் நாட்டுக் கொடி


நம் நாட்டுக் கொடி சிவப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் அமைந்திருக்கிறது. கொடியின் மேல் பகுதி சிவப்பு, கீழ்ப்பகுதி வெள்ளை. நம் நாட்டு மக்களின் நட்பு மனப்பான்மையையும் சகோதரத்துவத்தையும் சிவப்பு நிறம் குறிக்கிறது. மக்களிடத்தில் உள்ள தூய்மையான சீரிய பண்பினை வெள்ளை நிறம் குறிக்கிறது. கொடியின் மேல் பகுதியில், கொடிக் கம்பத்தின் அருகே ஓர் இளம்பிறையும் அதைச் சுற்றி ஐந்து விண்மீன்களும் உள்ளன. இளம் நாடொன்று ஐந்து குறிக்கோள்களான மக்களாட்சி (ஜனநாயகம்), அமைதி, முன்னேற்றம, நீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கிச் செல்வதை அவை குறிக்கின்றன.

வெள்ளி, 26 ஜூலை, 2013

சிங்கை நாடு

முன்னேறு வாலிபா!




முன்னேறு... வாலிபா... வாலிபா...
முன்னேறு வாலிபா முன்னேறு என்றும்
தொடுவாய் நோக்குவாய்
கண்தெரியாத கார் இருளில்
ஒளிரும் விண்மீனே

முன்னேறு... வாலிபா... முன்னேறு... வாலிபா...
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... வாலிபா...

முன்னேறு வாலிபா முன்னேறு என்றும்
தொடுவாய் நோக்குவாய்
கண்தெரியாத கார் இருளில்
ஒளிரும் விண்மீனே

தனிமையாலே பயந்த நாடுகள்
இருளில் ஒளி பெற உன்னை நாடும்
மேல் நோக்கு வாலிபா என்றும் முன்னேறி
தொடுவான் நோக்குவாய்... தொடுவான் நோக்குவாய்... 

முன்னேறு வாலிபா முன்னேறு என்றும்
தொடுவாய் நோக்குவாய்
கண்தெரியாத கார் இருளில்
ஒளிரும் விண்மீனே

தனிமையாலே பயந்த நாடுகள்
இருளில் ஒளி பெற உன்னை நாடும்
மேல் நோக்கு வாலிபா என்றும் முன்னேறி
தொடுவான் நோக்குவாய்... தொடுவான் நோக்குவாய்...   

முன்னேறு... வாலிபா... முன்னேறு... வாலிபா...
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... வாலிபா...

தேசிய தினக் குதூகலம்




வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு.

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.
வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.


வியாழன், 25 ஜூலை, 2013

இன நல்லிணக்க நாள்

இன நல்லிணக்க நாளை முன்னிட்டு, நம் தமிழ் மாணவர்கள் சிலர் படைத்த ஓர் இந்திய நடனம். இதோ உங்கள் பார்வைக்கு:

வியாழன், 16 மே, 2013

மின்மினிகள் 2013



 








S2 குழுமப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டாக மின்மினிகள் 2013 என்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இது 13 ஏப்ரல் 2013 அன்று நம் பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்மொழிப் போட்டிகளோடு தகவல் தொழில்நுட்பப் போட்டியும் நடைபெற்றது. நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றனர்.

 






பாட்டுப்போட்டியில் 1 Amethyst வகுப்பைச் சேர்ந்த காவியதர்ஷினி முதல் பரிசு கிடைத்தது.
 
 












காட்டிப் பேசுவோம் போட்டியில் 2 Topaz வகுப்பின் முகமது நூருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

 








கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்ற 3 Ruby வகுப்பைச் சேர்ந்த ராம்குமாருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 4 Ruby வகுப்பைச் சேர்ந்த தேவதர்ஷினியும் ரியாஸும் பங்குபெற்ற நாடகப்போட்டியில் அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற 5 Opal வகுப்பைச் சேர்ந்த ஜீவிதாவுக்கு ஆறுதல் பரிசும் விளம்பரப் போட்டியில் பங்குபெற்ற 6 Topaz வகுப்பைச் சேர்ந்த ஷாலினி மற்றும் ஜோஷிகா ஆகிய இருவருக்கும் இரண்டாம் பரிசும் கிடைத்தன. தகவல் தொழில்நுட்பப் போட்டியில் பிளாங்கா ரைஸ் குழுவுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
  
பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நம் அனைவருடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

செவ்வாய், 7 மே, 2013

தோரணம் கட்டுதல் பயிலரங்கு

10/04/2013 அன்று தமிழ் மாணவர்கள் அனைவரும் தத்தம் தமிழ்ப் பாடவேளைகளின்போது தோரணம் கட்டுதல் பயிலரங்கு ஒன்றில் பங்குபெற்றார்கள். தோரணம் என்றால் என்ன, அதை எந்த நிகழ்ச்சிகளில் கட்டுவார்கள், அதை எப்படிக் கட்டுவார்கள் போன்ற பல விவரங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். பின், தோரணம் கட்டுதல் நடவடிக்கையிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
 

 

 

 

 

 

 

 

 

 

 


 

நூலகச் சுற்றுலா

09/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் தமிழ் மாணவர்கள் புக்கிட் மேரா நூலகத்திற்குக் கல்விச் சுற்றுலா மேற்கொண்டார்கள். நூலகத்தில் வழங்கப்படும் சேவைகள் பற்றி அறிந்துகொண்டதோடு அங்கு உள்ள வசதிகள் பற்றியும் தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொண்டார்கள். மேலும், மின்வசதிகள் பற்றியும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் உள்ள வசதிகள், புத்தகங்கள் குறித்து அவர்கள் தமிழ் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பலமுறை நூலகத்திற்கு வந்திருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது எனலாம்.