வெள்ளி, 30 ஏப்ரல், 2010

என் விடைகளை நான் எவ்வாறு இடுகையுடன் இணைப்பது?

மாணவர்களே, உங்கள் பதில்களை நீங்கள் எவ்வாறு இடுகையுடன் இணைப்பது குறித்து உதவி வேண்டுமா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்காகச் சில குறிப்புகள்.

1. முதலில் "No comments" என்பதைக் கிலிக் செய்யவும்.



கீழ்க்காணும் படிவம் தோன்றும்.




2. அடுத்து. கேள்வி எண்களையும் கேள்விகளுக்கான பதில் எண்களையும் "Leave a Reply" பெட்டியினுள் தட்டச்சு (type) செய்யவும்.



3. பின், "இவ்வாறு கருத்துரையிடு" என்னும் பகுதியைக் கிலிக் செய்து, "பெயர்/URL" என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.



4. கீழ்க்காணும் படிவம் தோன்றும். உங்கள் பெயரை தட்டச்சு செய்த பின், உங்கள் வகுப்பை அடைப்புக்குறியினுள் தட்டச்சு செய்யவும். "URL" பகுதியில் எதுவும் தட்டச்சு செய்ய வேண்டாம்.



5. இறுதியில், "கருத்துரை சேர்" என்பதைக் கிலிக் செய்ய வேண்டும். உங்கள் விடைகள் முதலில் ஆசிரியர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகே, இடுகையுடன் இணைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் உதவி தேவைப்பட்டால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம்

நம் பள்ளியின் தமிழ் மொழி வாரத்தை முன்னிட்டு, 13/04/2010 நாள் அன்று, தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம் மேற்கொண்டார்கள். அப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எங்களின் முதல் தமிழ்க் குறும்படம்

‘அவன் என்ன செய்வான்?’

பிளாங்கா ரைஸ் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாகத் தமிழில் ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளது. ‘அவன் என்ன செய்வான்?’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இக்குறும்படம், பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு, உங்கள் பார்வைக்கு இவ்வலைப்பூவில் வைக்கப்படுகிறது.

இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் முடிவினைத் தட்டச்சு செய்து இந்த இடுகையுடன் இணையுங்கள். உங்கள் கற்பனை வளத்தைச் சற்றுத் தட்டி எழுப்புங்களே!

இக்குறும்படத் தயாரிப்பில் உதவிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!


நல்வழி நடப்போம்

வகுப்பில் கற்ற செய்யுள் பழமொழிகளைச் சின்னத்திரையில் கண்டு மகிழ்வோம். கற்றதை நினைவில் பதிப்போம்.

தமிழ் மொழி வாரம் 2010

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் தமிழ் மொழி வாரம்!
(ஏப்ரல் 12 – ஏப்ரல் 16 2010)

தமிழ் மொழி வாரத்தை முன்னிட்டு, தமிழ்மொழிப் பிரிவு பற்பல நிகழ்ச்சிகளை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

திங்கட்கிழமை (12/04/2010)
- ‘நல்வழி நடப்போம்’ – படச்சுருள் அறிமுகம்
- ‘அவன் என்ன செய்தான்’ – தமிழ்க் குறும்படம் அறிமுகம்
- ‘வலைப்பூவில் கருத்துரைக்கலாம் வாங்க!’ (தொடக்கநிலை 5 & 6)

செவ்வாய்க்கிழமை (13/04/2010)
- ‘நானும் கவிஞனாகலாம்’ (தொடக்கநிலை 5)
- தமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம் (தொடக்கநிலை 5 & 6)

புதன்கிழமை (14/04/2010)
- தமிழ்ப் புத்தாண்டு

வியாழக்கிழமை (15/04/2010)
- கதை சொல்லும் போட்டி (தொடக்கநிலை 3 & 4)
- பேச்சுப்போட்டி (தொடக்கநிலை 5 & 6)

வெள்ளிக்கிழமை (16/04/2010)
- மொழி விளையாட்டுகள் (தொடக்கநிலை 1 & 2)

திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (12/04/2010 - 16/04/2010)
- ‘தமிழ்மொழி – என் கருத்து’
- தினம் ஒரு விடுகதை

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழ் மொழி மாதம்

01 ஏப்ரல் 2010 தொடக்கம் 25 ஏப்ரல் 2010 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.singai-tamil.org/ என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 ஏப்ரல் தொடக்கம் 16 ஏப்ரல் வரை பள்ளியில் தமிழ்மொழி வாரம் அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.

அன்புடன்,
தமிழ்மொழிப் பிரிவு