வியாழன், 31 மார்ச், 2011

தமிழ் மொழி மாதம் ஆரம்பம்!

01 ஏப்ரல் 2011 தொடக்கம் 24 ஏப்ரல் 2011 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.thangameen.com/tmvizha என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல், 01 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் தமிழ்மொழி மாதத்தின் தொடக்கவிழா (தமிழா தமிழா) நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படும். அதனை உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து காணத் தவறாதீர். அந்நிகழ்ச்சியை நீங்கள் mediacorp.sg/tlf2011 என்ற இணையத்தளம் வாயிலாகவும் காணலாம்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை பள்ளியில் தமிழ்மொழி வாரம் அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இந்த வலைப்பூவில் காணலாம்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.

செவ்வாய், 22 மார்ச், 2011

மாணவர்களுக்கான வளமூட்டும் வகுப்புகள்

இந்தத் தவணையில், தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை இரண்டு மாணவர்கள் கைப்பாவைப் பயிலரங்கு
தொடக்கநிலை மூன்று & நான்கு மாணவர்கள் பேச்சு, நடிப்பு பயிலரங்கு
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் தன்னம்பிக்கை உரையாற்று பயிலரங்கு

மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள இவ்வகுப்புகள் நிச்சயமாகத் துணைபுரியும்.