சனி, 30 ஏப்ரல், 2011

தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்...

தேர்வுகள் நெருங்கி கொண்டிருக்கும் காலம் இது. 
உங்கள் நேரத்தை நல்வழியில் வகுத்து உங்களின் பாடத்திருப்பங்களை நல்ல முறையில் செய்திடுங்கள். 
உங்களின் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்!

வெற்றி உங்களுக்கே!  

உங்கள் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய எங்களுடைய இனிய நல்வாழ்த்துக்கள்!


Source (மூலம்): 
Youtube - http://www.youtube.com/watch?v=x3PuKG2HqWs

சனி, 23 ஏப்ரல், 2011

கண்டுபிடி! கண்டுபிடி! – விடைகள்

கொடுக்கப்பட்ட இரண்டு படங்களில், மொத்தம் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன என்ற கேள்விக்குச் சரியான பதில்: 6

அந்த ஆறு வித்தியாசங்கள் பின்வருமாறு:



இந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளித்தவர்கள்:

அல்மிரா (3Opal)
ஜமிர் (5Opal)
முருகன்வேல் (6Sapphire)
ஆஷிக் (6Topaz)
யூசுஃப் (6Topaz)
பாத்திமா (6Ruby)

இந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்குப் பள்ளியில் நடைபெற்ற தமிழில் என்ன?’ என்ற புதிர்ப்போட்டியில் ஒரு கூடுதல் புள்ளி (Bonus point) வழங்கப்படும்.

அதுபோல், தமிழ்மொழியாம் செம்மொழியாம் என்ற படச்சுருளில், மொத்தம் எத்தனை ஒற்றை எழுத்துகள் வந்தன என்ற கேள்விக்குச் சரியான பதில்: 23

அந்த 23 எழுத்துகள் பின்வருமாறு:

,,,,,,,,,, கு,,,, மு,,,,,,,,

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளித்தவர்கள்:

ஆஷிக் (6Topaz)
பாத்திமா (6Ruby)

இந்த இரண்டு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்குப் பள்ளியில் நடைபெற்ற தினம் ஒரு விடுகதை?’ என்ற புதிர்ப்போட்டியில் ஒரு கூடுதல் புள்ளி (Bonus point) வழங்கப்படும்.

இந்தக் கண்டுபிடி! கண்டுபிடி! போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி! தொடர்ந்து இதுபோன்ற போட்டிக்காக இவ்வலைப்பூவில் எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தமிழ்மொழி வாரம் முடிவடைந்தது!

இவ்வாண்டு தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி அனுசரித்த தமிழ்மொழி வாரம் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 11/04/2011 அன்று நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தோடு தொடங்கிய இவ்வாரத்தில் மாணவர்கள் பற்பல மொழி நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் மிகந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள்.

பள்ளியின் அறிவிப்புப் பலகையில் நிகழ்ந்த தினம் ஒரு விடுகதை மற்றும் தமிழில் என்ன?’ என்ற போட்டிகளுக்கும் வலைப்பூவில் நடந்த கண்டுபிடி! கண்டுபிடி என்ற போட்டிக்கும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கான பதில்களும் அவற்றில் வெற்றி பெற்றவர்களுடைய விவரங்களும் இவ்வலைப்பூவில் விரைவில் வெளியிடப்படும். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

தமிழ்மொழி வாரம் சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி! தமிழ்மொழி வாரம் முடிவுபெற்றாலும், நாம் தொடர்ந்து தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!















வானொலி நிலையாத்தாருடன் சந்திப்பு

பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு, 12/04/2011 அன்று ஒலி 96.8 வானொலி நிலையத்தின் படைப்பாளர்கள் பாரதியும் ஆனந்த்தும் நம் பள்ளிக்கு வருகை அளித்திருந்தார்கள். தங்கள் வாழ்க்கையில் தமிழ்மொழி பெறும் முக்கியத்துவத்தையும் அவர்களின் தமிழ்மொழி புழக்கம் குறித்தும் அவர்கள் நம் மாணவர்களுடன் ஒரு உரை நிகழ்த்தினார்கள். அதோடு, அவர்களின் தற்போதைய வானொலி படைப்பாளர் பணியில் அவர்கள் எனனென்ன செய்வார்கள் என்பதையும் நம் மாணவர்களுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியாகப் பதில்களைக் கூறிய மாணவர்களுக்கு ஒலி 96.8-இன் சின்னம் கொண்ட கவர்ச்சிமிக்க பரிசுப் பைகளையும் வழங்கி, மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள். 

அதற்குப் பிறகு, இளம்மொட்டுகள் என்னும் வானொலி நிகழ்ச்சிக்காக, நம் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் வெளிக்காட்டிய பற்பல திறன்களை அவர்கள் பதிவு செய்துகொண்டார்கள். நம் பள்ளி மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் நாம் வானொலியில் கேட்டு மகிழலாம். குறிப்பாக எந்த நாள் என்பதை நாங்கள் அடுத்த மாதம் அறிவிப்போம். எதிர்பார்த்துக் காத்திருங்க்ள!

அந்நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:





















திங்கள், 11 ஏப்ரல், 2011

கண்டுபிடி! கண்டுபிடி!



மேலே கொடுக்கப்பட்ட படச்சுருளில், மொத்தம் எத்தனை ஒற்றை எழுத்துகள் வந்துள்ளன என்பதைக் கண்டுபிடித்து, உங்கள் விடையை இந்த இடுகையுடன் இணையுங்கள் (comments)! அவ்வாறு செய்யும்போது, உங்கள் பெயரையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! 

கண்டுபிடி! கண்டுபிடி!

கீழே கொடுக்கப்பட்ட இரண்டு படங்களில், மொத்தம் எத்தனை வித்தியாசங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்து, உங்கள் விடையை இந்த இடுகையுடன் இணையுங்கள் (comments)! அவ்வாறு செய்யும்போது, உங்கள் பெயரையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்!



கருத்துரைக்கலாம் வாங்க!

நான் அறிந்த தமிழ்மொழியின் சிறப்பு

மேல் காணப்படும் தலைப்புக்கான உங்கள் கருத்துகள் என்ன? இப்போதே இந்த இடுகையுடன் இணையுங்கள் (comments). அவ்வாறு செய்யும்போது, உங்கள் பெயரையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்!

பாடுவோம் வாருங்கள்!

தமிழ்மொழி விழா 2011 பாடல்



என் வசீகரத் தமிழ். உன் வசீகரத் தமிழ். நம் வசீகரத் தமிழ்.

தமிழில் எழுதிப் பார் ஓவியங்கள் தெரியும்.
தமிழில் சொல்லிப்பார் ராகங்கள் புரியும்.
தமிழோடு வாழ்ந்துபார் உறவுகள் மலரும்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம். தமிழோடு இணைவோம்.
தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம். தமிழோடு இணைவோம்.
தமிழாவோம். தமிழாவோம். தமிழாவோம்.
தமிழா....

கலக்கம் தான் என்ன? தயக்கம் தான் என்ன? உறவாடலாம் வா!
உந்தன் மொழியை உணர. அதன் அருமை பரவ! கொண்டாடலாம் வா!
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாய் காண்போமா? இனிதாய் காண்போமா? இனிதாய் காண்போமா? இனிதாய் காண்போமா? தமிழா...

தமிழே நம் பெயர். தமிழே நம் பயிர். உயிராகலாம் வா!
தமிழே நம் கனவு. தமிழே நம் உணவு. உரையாடலாம் வா!
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாய் காண்போமா? இனிதாய் காண்போமா? காண்போமா? இனிதாய் காண்போமா?

தமிழில் எழுதிப் பார் ஓவியங்கள் தெரியும்.
தமிழில் சொல்லிப்பார் ராகங்கள் புரியும்.
தமிழில் எழுதிப் பார் ஓவியங்கள் தெரியும்.
தமிழில் சொல்லிப்பார் ராகங்கள் புரியும்.
தமிழோடு வாழ்ந்துபார் உறவுகள் மலரும்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம். தமிழோடு இணைவோம்.
தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம். தமிழோடு இணைவோம்.
தமிழாவோம். தமிழாவோம். தமிழாவோம்.
தமிழா....

‘நானும் செய்திவாசிப்பாளர் ஆகலாம்’

இவ்வாண்டு தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதுமையான போட்டி நடத்தப்பட்டது. அதுதான், நானும் செய்திவாசிப்பாளர் ஆகலாம் போட்டி ஆகும். இப்போட்டியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் செய்திகளைச் சுயமாக எழுதி, அவற்றைச் செய்திவாசிப்பாளர் போல் வாசித்தனர். அவர்கள் வாசித்தது பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட படச்சுருள்களைக் கொண்டு மாணவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அவ்வாறு அப்போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வந்த மாணவர்களின் படச்சுருள்கள் பின்வருமாறு:

மூன்றாம் நிலையில்

இரண்டாம் நிலையில்

முதல் நிலையில்

திரு.காலிட்டுடன் ஒரு சந்திப்பு

தமிழ்மொழி வாரம் தொடங்கிவிட்டது!

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி தமிழ்மொழி வாரத்தை அனுசரிக்கிறது. இன்று (11/04/2011) நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின் போது, தமிழ்மொழி வாரம் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று தொடக்கம், வெள்ளி வரை (15/04/2011) அனுசரிக்கப்படும் இத்தமிழ்மொழி வாரத்தின் போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இது குறித்த விரிவான விவரங்களை வலைப்பூவின் இடப்புறத்தில் நீங்கள் காணலாம்.

இவ்வாரத்தின் போது நிகழும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நீங்கள் இவ்வலைப்பூவில் உடனுக்குடன் எதிர்பார்க்கலாம்.

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!





'முத்துக்குவியல்' - கட்டுரை புத்தகம்

கடந்த 08/04/2011 அன்று S2 குழுமப் பள்ளிகள் இணைந்து தயாரித்த முத்துக்குவியல் என்ற கட்டுரை புத்தகத்தின் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வெளியீட்டு நிகழ்ச்சி பெய் தொங் தொடக்கப்பள்ளியில் நடந்தேறியது. அதில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுடன் தமிழாசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் தேசிய கல்விக் கழகத்தின் துணை பேராசிரியர் முனைவர் A.Ra.சிவகுமாரன் வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது, சிண்டாவின் மூத்த இயக்குநர் திருமதி.சரோஜினியும் கலந்து கொண்டு, மாணவர்களுக்குத் தன்முனைப்புப் பேச்சு ஒன்றை நிகழ்த்தினார்.

நம் பள்ளி மாணவர்களான யூசுஃப் மற்றும் மிர்சான் எனக்குள் பலர் என்ற அங்கத்தை அந்நிகழ்ச்சியில் படைத்தனர். யூசுஃப் பல குரல்களில் பேசி, அங்குக் கூடியிருந்த அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.


2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் S2 குழுமப் பள்ளிகளில் பயின்ற தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறு மாணவர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகள் முத்துக்குவியல் என்ற இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நூல் தற்போது தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது உறுதி.













வியாழன், 7 ஏப்ரல், 2011

பள்ளியில் தமிழ்மொழி வாரம் 2011



தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி தமிழ்மொழி வாரத்தை அனுசரிக்கவிருக்கிறது. இவ்வாண்டு அவ்வாரம் 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இவ்வலைப்பூவில் காணலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

புதன், 6 ஏப்ரல், 2011

தமிழோசை போட்டிகள் 2011

கடந்த 5 ஏப்ரல் 2011 அன்று நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நியூ டவுன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தமிழோசை 2011 போட்டிகளில் பங்குபெற்றனர். வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறு போட்டிகள் அன்று நடத்தப்பட்டன.

தொடக்கநிலை 1 பாடல் போட்டி
தொடக்கநிலை 2 சொல் உருவாக்கப் போட்டி
தொடக்கநிலை 3 கதை சொல்லும் போட்டி
தொடக்கநிலை 4 வேடமேற்று நடித்தல் போட்டி
தொடக்கநிலை 5 கோலம் வரையும் போட்டி
தொடக்கநிலை 6 விளம்பரம் செய்தல் போட்டி

மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டிகளில் ஈடுபட்டார்கள். அவர்களின் முயற்சிகளுக்குக் கை மேல் பலன் கிடைத்தது.

முடிவுகள்
லோக ஜனனி (1 Opal) ஆறுதல் பரிசு
முகம்மது ரியாஸ் (2 Ruby) இரண்டாம் பரிசு
ஜோஷிகா & ஷாலினி (4 Opal) மூன்றாம் பரிசு
அப்துல் தஸ்லிம் (5 Ruby) & M.அஜெய் (5 Sapphire) மூன்றாம் பரிசு
சபின் சாரா (6 Topaz) இரண்டாம் பரிசு

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டிகளில் பங்குபெற்ற மற்ற மாணவர்களுக்கும் நிகழ்ச்சி அன்று பார்வையாளர்களாக வருகை அளித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி!

நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: