திங்கள், 11 ஏப்ரல், 2011

கருத்துரைக்கலாம் வாங்க!

நான் அறிந்த தமிழ்மொழியின் சிறப்பு

மேல் காணப்படும் தலைப்புக்கான உங்கள் கருத்துகள் என்ன? இப்போதே இந்த இடுகையுடன் இணையுங்கள் (comments). அவ்வாறு செய்யும்போது, உங்கள் பெயரையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்!

12 கருத்துகள்:

  1. திரு.மோகன் (ஆசிரியர்)11 ஏப்ரல், 2011 அன்று AM 8:10

    தமிழ்மொழியில் ஒரு குறிப்பிட்டப் பொருளை வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப குறிக்கப் பல சொற்கள் உள்ளன. உதாரணத்திற்கு, அன்பு, காதல், பாசம், நேசம் முதலியவை வெவ்வேறு நிலைகளில் உள்ள அன்பினை வெளிப்படுத்தும் வண்ணம் அமைவதை நாம் காணலாம். அதுவே தமிழின் சிறப்பாகும்.

    பதிலளிநீக்கு
  2. சபின் சாரா (6Topaz)11 ஏப்ரல், 2011 அன்று PM 6:38

    நம்முடைய தமிழ்மொழி பழமை வாய்ந்த மொழியாக இருந்தாலும் அதில் பழமைச் சிறப்பும் கருத்துச் சிறப்பும் நிறைந்த அரிய நூல்கள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. யூசுஃப் அஸ்மான் ( 6Topaz )11 ஏப்ரல், 2011 அன்று PM 6:45

    நம் தாய்மொழியான தமிழ்மொழி பழமை வாய்ந்த மொழி என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. பழமைச் சிறப்பும் கருத்துச் சிறப்பும் நிறைந்த அரிய நூல்கள் தமிழ்மொழியில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. ஆஷிக் அஹ்மத் 6 Topaz11 ஏப்ரல், 2011 அன்று PM 6:46

    தமிழ் ஒரு பழமையான மொழி. கருத்து மிக்க மொழியாகும். அதுமட்டுமா? தமிழ் மொழியில் பற்பல திருக்குறள்கள், பழமொழிகள், ஆத்திசூடி இருக்கின்றன. தமிழ் மொழியில் நிறைய இனிய சொற்கள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. ரஹ்மான் 5ரூபி11 ஏப்ரல், 2011 அன்று PM 6:47

    தமிழ் மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.எனக்குத் தமிழ் மொழி பிடிக்கும்.தமிழில் பேசுவோம்,தமிழை நேசிப்போம்.

    பதிலளிநீக்கு
  6. தமிழ் ஓர் இனிமையான மொழி.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் பழமை வாய்ந்த மொழி மட்டும் அல்ல.அது சிறப்பான
    மொழியும் கூட.தமிழில் திருக்குறள் பழமொழி போன்ற பல நல்ல கருத்துகளைச் சொல்லும் பல அரிய நூல்கள் உள்ளன.எனவே தமிழே சிறந்த மொழி.

    தமிழை நேசிப்போம்
    தமிழில் பேசுவோம்

    பதிலளிநீக்கு
  8. தமிழ் போல மற்ற மொழி அல்ல.தமிழ் மொழியைப் படிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. தமிழ்ப் பாட்டு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. எனக்குத் தமிழ்ப் பாட்டு பிடித்திருக்கிறது.தமிழில் பேசுவோம். தமிழை நேசிப்போம். தமிழ் வாழ்க

    பதிலளிநீக்கு
  10. முகமது ஐமிர் (5Opal)13 ஏப்ரல், 2011 அன்று AM 8:14

    தமிழ் இனிய மொழி. மற்ற இனமக்கள் நம் மொழியில் பேசும்போது கேட்கப் பெருமையாக இருக்கிறது. ஆக, தமிழர்களாகிய நாம் தமிழில் பேசவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. அப்துல் தஸ்லிம் (5 RUBY)13 ஏப்ரல், 2011 அன்று AM 8:16

    தமிழ் ஓர் இனிமையான மொழி .தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். சிங்கப்பூர் தமிழர்களுக்கு இனிய தமிழ்மொழி மாத வாழ்த்துக்கள். தமிழில் பேசுவோம் தமிழை நேசிப்போம்.

    பதிலளிநீக்கு
  12. நம் தாய்மொழி தமிழ்மொழி.அது பழமை வாய்ந்த மொழி என்றாலும் அதில் பழமைச் சிறப்பும் கருத்துச் சிறப்பும் நிறைந்த அரிய நூல்கள் உள்ளன .தமிழ் நம் தாய்மொழி என்பதை நாம் மறக்கக்டாது.

    பதிலளிநீக்கு