திங்கள், 11 ஏப்ரல், 2011

'முத்துக்குவியல்' - கட்டுரை புத்தகம்

கடந்த 08/04/2011 அன்று S2 குழுமப் பள்ளிகள் இணைந்து தயாரித்த முத்துக்குவியல் என்ற கட்டுரை புத்தகத்தின் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வெளியீட்டு நிகழ்ச்சி பெய் தொங் தொடக்கப்பள்ளியில் நடந்தேறியது. அதில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுடன் தமிழாசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் தேசிய கல்விக் கழகத்தின் துணை பேராசிரியர் முனைவர் A.Ra.சிவகுமாரன் வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது, சிண்டாவின் மூத்த இயக்குநர் திருமதி.சரோஜினியும் கலந்து கொண்டு, மாணவர்களுக்குத் தன்முனைப்புப் பேச்சு ஒன்றை நிகழ்த்தினார்.

நம் பள்ளி மாணவர்களான யூசுஃப் மற்றும் மிர்சான் எனக்குள் பலர் என்ற அங்கத்தை அந்நிகழ்ச்சியில் படைத்தனர். யூசுஃப் பல குரல்களில் பேசி, அங்குக் கூடியிருந்த அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.


2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் S2 குழுமப் பள்ளிகளில் பயின்ற தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறு மாணவர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகள் முத்துக்குவியல் என்ற இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நூல் தற்போது தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக