திங்கள், 28 ஏப்ரல், 2014

தடயம்!

8 ஏப்ரல் 2014 அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காகத் தடயம் என்ற ஒரு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் தமிழை ஆர்வத்தோடு கற்றுக்கொள்வதோடு மாணவர்களிடையே குழு உணர்வை வளர்க்கவும் இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின் போது, பள்ளியைச் சுற்றி வெவ்வேறு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தடயத்தைக் கொண்டு, தாங்கள் செல்ல வேண்டிய அடுத்த நிலையத்தைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் அனைவரும் இந்நடவடிக்கையில் உற்சாகத்துடனும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டும் செயல்பட்டார்கள். இந்நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக