திங்கள், 28 ஏப்ரல், 2014

நடிப்புப் பட்டறை 2014

இவ்வாண்டு பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களை நடிப்புப் பட்டறை ஒன்று தொடங்கி வைத்தது. இப்பட்டறை தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. 31 மார்ச் 2014 அன்றும் 7 ஏப்ரல் 2014 அன்றும் இரண்டு பாகங்களாக இப்பட்டறை நடைபெற்றது. இந்தப் பட்டறையில் மாணவர்கள் நாடகத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆடை, ஆபரணங்கள், இதரப் பொருட்கள் முதலியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்ததோடு அவை தங்கள் நாடகத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் கற்றுக்கொண்டார்கள். இப்பட்டறையின் இறுதியில், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பொருட்களைக் கொண்டு புகழ்பெற்ற சிறுவர்க் கதைகளை மாற்றியமைத்து ஒரு குட்டி நாடகத்தைத் தங்கள் குழுக்களில் படைத்தார்கள். பட்டறையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக