திங்கள், 28 ஏப்ரல், 2014

பசுமையில் குதூகலம்

5 ஏப்ரல் 2014 அன்று சில தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் ஹார்ட்பார்க் (HORTPark) என்ற பூங்காவிற்குச் சென்றிருந்தார்கள். அங்கு சிற்பிகள் மன்றம், தமிழர் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பசுமையில் குதூகலம் என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்குபெற்றார்கள். பசுமையான சூழலில் மாணவர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. அன்று மழை பொழிந்ததால், அனைத்து நடவடிக்கைகளும் உள்புறத்திலேயே நடத்தப்பட்டன. ஆனாலும், மாணவர்களின் ஆர்வ நிலை சற்றும் குறையாமல் இருக்க பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைகளின் போது நம் பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களோடு குழுக்களாகச் சேர்ந்து செயல்பட்டார்கள். மாணவர்கள் Ipad எனப்படும் கைக்கணினிகளையும் பயன்படுத்தி புகைப்படங்களையும் படச்சுருள்களையும் எடுத்தார்கள். இறுதியில் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக