செவ்வாய், 30 மார்ச், 2010

தமிழ்த் தட்டச்சு வகுப்புகள்இத்தவணையின் தொடக்கத்திலேயே, நம் மாணவர்கள் தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடக்கநிலை ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் திங்கட்கிழமை (22/03/10) அன்றும் தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் செவ்வாய்கிழமை (23/03/10) அன்றும் தமிழ்த் தட்டச்சு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வெகுநாளாகக் காத்திருந்த பலநாள் கனவு இந்நாள்களில் நிறைவேறின. அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் அவ்வகுப்புகளுக்கு வந்து, தமிழில் தட்டச்சு செய்வதை நன்கு கற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக