வியாழன், 4 பிப்ரவரி, 2016

கட்டியங்காரன் மாணிக்கம்

4-ஆம் தேதி பிப்ரவரி மாதம் அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கட்டியங்காரன் மாணிக்கம் என்ற நாடகம் ஒன்றைக் காண சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் நாடகத்தைக் கண்டு களித்ததோடு, வெவ்வேறு நாடக வடிவங்களைப் பற்றியும் அறிந்துகொண்டார்கள். அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 




4 கருத்துகள்:

  1. நான் பார்த்த நாடகம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கதையுடைய கருத்து எனக்குப் புரிந்ததால், எனக்கு அந்த நாடகம் பிடித்திருந்தது. அந்த நாடகத்தைப் பார்க்கும்போது எனக்கு ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் நாடகத்தில் நடிகர்கள் எப்படித் தன்னம்பிக்கையுடன் நடிக்கிறார்கள் என்பதைப் பார்த்து ரசித்தேன். எதிர்காலத்தில் நான் இதுபோன்ற நாடகங்களைச் சென்று காண விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் பார்த்த நாடகம் அற்புதமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அந்த நாடகத்தைப் பார்க்கும்போது என் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது. பழங்காலத்தில் சிங்கப்பூருக்குத் தமிழர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பதை இந்த நாடகத்தின் வழி நான் கற்றுக்கொண்டேன். மேலும் இதுபோன்ற வித்தியாசமான கதைகளைக் கொண்ட நாடகங்களைப் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நான் பார்த்த நாடகம் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அதனால் எனக்கு அந்த நாடகம் பிடித்திருந்தது. அந்த நாடகத்தைப் பார்த்தபோது என் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது. நாம் முயற்சி செய்தால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற பாடத்தை நான் இந்த நாடகத்தின் வழிக் கற்றுக்கொண்டேன். நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற நாடகங்களைச் சென்று காண நான் விரும்புவேன்.

    பதிலளிநீக்கு
  4. நான் பார்த்த நாடகம் அற்புதமாக இருந்தது. இந்த நாடகத்தில் பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தன. மீண்டும் இதுபோன்ற நாடகங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.

    பதிலளிநீக்கு