சனி, 20 பிப்ரவரி, 2016

தமிழ்மொழி கற்றல் விழா

பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி அன்று தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்கள் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்மொழி கற்றல் விழாவில் பங்கு பெற்றார்கள். விழாவில் நடைபெற்ற அனைத்து அங்கங்களும் நடவடிக்கைகளும் மாணவர்கள் தமிழ்மொழியைப் பற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியும்  மேலும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்தன. 

அதோடு நம் மாணவர்கள் மற்ற பள்ளிகளிலிருந்து வந்த தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுடன் நட்புகொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் இந்த விழா வாய்ப்பு அளித்தது. மொத்தத்தில் விழாவில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த விழா ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது எனலாம். 

அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 



3 கருத்துகள்:

  1. நான் பொம்மைக் கதைகள் என்ற நடவடிக்கையில் பங்குபெற்றேன். அதில் பங்குபெறும்போது என் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குப் பொம்மைக் கதைகள் பிடித்து இருந்தது. அது மிகவும் சிரிப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. நான் 'Dubsmash' மற்றும் 'கதை சொல்வது' நடவடிக்கைகளில் கலந்துகொண்டேன். எனக்கு அவற்றில் பங்குபெறுவதில் ஆர்வமாக இருந்தது. அந்த இரண்டு நடவடிக்கைகளும் மிகவும் சிரிப்பாக இருந்தன. எனக்கு 'Dubsmash' நடவடிக்கை பிடித்து இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. 'சொல்லைக் கண்டுபிடி' நடவடிக்கையில் நான் கலந்துகொண்டேன். நான் அந்த நடவடிக்கையில் தோல்வி கிடைத்துவிடும் என்று எனக்கு முதலில் பயமாக இருந்தது. ஆனால், அந்த நடவடிக்கை மிகவும் சுவாரசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு