வியாழன், 15 மார்ச், 2012

தமிழ்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் (த.தி.மே.தி) தொடங்கியது

தமிழ்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒன்றுக்கு முதன்முறையாகப் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் மாணவர்களிடையே கற்பனைத் திறன் (Imagination), புத்தாக்கத் திறன் (Creativity), சிந்தனைத் திறன் (Criticial Thinking) மற்றும் படைப்பாற்றல் திறன் (Presentation Skill) முதலியவற்றை அண்மைய தொழில்நுட்பத்தைக் கொண்டு வளர்த்தல், அவர்களுக்குப் படச்சுருள் தயாரிப்புத் தொடர்பான திறன்களைக் கற்பித்தல், தொழில்நுட்பத் தொடர்பான போட்டிகளில் பங்குபெறுவதற்குத் தயார் படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்குச் சில தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் தமிழ் ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 12/03/2012 அன்று இத்திட்டத்தின் முதல் வகுப்பு நடைபெற்றது. முதல் கட்டமாக, மாணவர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் அவர்கள் இத்திட்டத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 

 

 

 

இத்திட்டத்தின் வழி மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு விரைவில் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒரு சிறந்த படைப்பை வழங்குவர் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக