வெள்ளி, 29 மே, 2015

'கனவு நனவாகிறது' 201527 மே அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களான திரிஷா, நூர், யாஷிக்கா, பிரதோஷ், இப்ராஹிம், ஷஃபிக் ஆகியோர் கனவு நனவாகிறது 2015 என்ற போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்துப் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் ஒரு கடையை அமைத்து, எழுதுபொருட்களை விற்பதோடு அவர்களின் கடையைப் பற்றி அவர்கள் விளம்பரமும் செய்யவேண்டியிருந்தது. 

‘ஐ கடை என்று தங்கள் கடைக்குப் பெயர் சூட்டி, அவர்களின் கடையைப் பற்றி நம் பள்ளி மாணவர்கள் அபாரமாக விளம்பரம் செய்தார்கள். போட்டியின் இறுதியில், அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிட்டியது. அந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்! 

போட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக