வெள்ளி, 28 மார்ச், 2014

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! - 1

ஒரு சமயம் குற்றவாளி ஒருவனுக்கு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டது. அவனிடம் மூன்று வெவ்வேறு அறைகள் பற்றிக் கூறப்பட்டது. அந்த அறைகளிலிருந்து ஒன்றை அவன் தேர்வு செய்யவேண்டும் என்றும் அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நிலைமைகள் இருந்தன. அவை பின்வருமாறு:

அறை 1 - ஆயிரக்கணக்கான கொடிய விஷப் பாம்புகளைக் கொண்ட அறை

அறை 2 - துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் காவலாளிகளைக் கொண்ட அறை

அறை 3 - மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை


இறுதியில் குற்றவாளி ஓர் அறையைத் தேர்வு செய்து உள்ளே சென்றான். அவன் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்ததால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அவனும் இனிமேல் தவறு செய்யமாட்டான் என்று உறுதி பூண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் எந்த அறையைத் தேர்வு செய்திருப்பான்? அவன் எப்படிச் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் அவ்வறையில் உயிருடன் இருந்தான்?

எப்படி? எப்படி? அப்படி! அப்படி!

உங்களுக்குப் பதில் தெரிந்தால், உடனே கீழே கருத்துரையிடுக. கருத்துரை செய்வதில் உதவி தேவைப்பட்டால், மேலே கருத்துரைப்பது எப்படி? என்பதை கிலிக் செய்து உதவி பெறுங்கள்! 

சரியான பதில் கூறும் முதல் மாணவனுக்குப் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது!

45 கருத்துகள்:

 1. அறை 3-5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை.எல்லாம் சிங்கங்கள் செத்துவிட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முஹ்சின், உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3 - 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை. எல்லா சிங்கங்களும் இறந்துவிட்டன.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
 2. அறை 3, அறை என்றால் அடி அம்மா அறை கொடுத்தார்.அதனால் அறை 3 இல் மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் இருக்கின்றன.அதனால் அந்த அறை திருடனக்கு வலிக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவிதா, உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3, அறை என்றால் அடி. (அம்மா அறை கொடுத்தார்.) அதனால் அறை 3-இல் 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் இருக்கின்றன. அதனால் அந்த அறை திருடனுக்கு வலிக்காது.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
  2. ஆனாலும் ஜீவிதா, அறைக்கு இன்னொரு பொருள் இருக்கிறதே...

   நீக்கு
 3. அறை 2 - துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் காவலாளிகளைக் கொண்ட அறை

  பதிலளிநீக்கு
 4. அறை 3 - 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை. காரணம்

  அந்த சிங்கம் 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருந்தால் அது இறந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டையனா, உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3 - 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை. காரணம் அந்தச் சிங்கங்கள் 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருந்தால் அவை இறந்துவிடும்.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
 5. அறை 3- 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை,காரணம் சிங்கம் சாப்பிடாமல் இருந்ததால் அந்த சிங்கத்திற்கு பலம் இல்லாமல் இருந்திருக்கும.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முஃவித், உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3- 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை. காரணம் சிங்கங்கள் சாப்பிடாமல் இருந்தால் அந்தச் சிங்கங்களுக்குப் பலம் இல்லாமல் இருக்கும்.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
 6. அ றை3 .காரணம்-மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் அவனை பயமுறுத்தி இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீர்த்தனா, உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3. காரணம் - 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் அவனைப் பயமுறுத்தி இருக்கும்.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
  2. ஆனாலும், கீர்த்தனா பயமுறுத்தும் சிங்கங்கள் அவனைத் தாக்காதோ?

   நீக்கு
 7. அறை 3. காரணம் அந்த 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் பசியில் செத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஃபில், உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3. காரணம் 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் பசியில் இறந்திருக்கும்.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
 8. அறை 1 - ஆயிரக்கணக்கான கொடிய விஷப் பாம்புகளைக் கொண்ட அறை - பாம்புகள் அவனை கடித்தன. ஆனால் அந்த விஷம் அவனை கொல்ல நிறைய நேரம் எடுத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல முயற்சி, அஸ்வின்!
   ஆனால் விஷம் அவனைக் கொல்ல எப்படி அதிக நேரம் எடுத்தது? அவன் அதிசய மனிதனோ?

   நீக்கு
 9. அறை 2 - துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் காவலாளிகளைக் கொண்ட அறை. துப்பாக்கியில் தோட்டாகள் இல்லை அதனால் அவனை சுட்டு கொல்ல முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்மீரா, உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 2 - துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் காவலாளிகளைக் கொண்ட அறை. துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை . அதனால் அவனைச் சுட்டு கொல்ல முடியவில்லை.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
 10. அறை 3.அந்த5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கத்தற்கு சாப்பிட பலம் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாரிக், உன் பதில் இப்படி இருந்திருக்க வேண்டும்:

   அறை 3. 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்களுக்குச் சாப்பிட பலம் இல்லை.

   அடுத்த முறை பிழையின்றி எழுத முயலவும்!

   நீக்கு
 11. அறை 3
  அந்த சிங்கங்கள் ஒன்று ஒன்றுறாக சாப்பிட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகேஷ், உன் பதிலில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 12. அறை 2 . ஏன் என்றால் காவலாரிகள்ளுக்கு மத்த விலங்குகளிடம் விட பயமாக இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாரணி, உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 13. அறை இரண்டு. ஏன் என்றால் அவன் காவலாரிகளை அடித்துவிட்டு தப்பித்திருபான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனிஸ், உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 14. அறை 2. ஏன்றால் அந்த குற்றவாளி காலலாளிஉதய மணத்தை மாற்றிப்பான்.அதனால் அவர்கள்
  குற்றவாறியை உத்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருண், உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 15. அறை 2. ஏன் என்றால் அந்த குற்றவாளி காவலாளிகளிடம் ஏதாவுது கூறி அவங்களுடைய மணத்தை மாற்றிப்பான். அதனால் அவர்கள் அந்த குற்றவாளியை மன்னித்து விட்டிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூர், உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 16. அறை 2 . ஏனென்றால் குற்றவாளி ,துப்பாக்கிக் குண்டு அவன் உடலில் பட்டது. ஆனால் அவன் இன்னும் உயிருடன் இருந்ததால் காவலர்கள் அவனை மன்னித்து விட்டு குற்றவாலி காவல் நிலைத்திருந்து வெளியே செல்லக்குடிய வாய்ப்பிருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஷில், உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 17. அறை 2
  குற்றவாளி காவலாளிகளைக் கட்டிபோட்டுவிட்டு சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் வந்திருப்பான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரியா, உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 18. அறை 3
  அந்த சிங்கங்கள் அவனை மன்னித்து விட்டன

  பதிலளிநீக்கு
 19. அறை 2.காவலாலிகள் அவன் கேட்டதால் சுடாமல் தப்பிக்கவிட்டிருப்பார்கல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வள்ளி, உன் பதிலில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 20. அறை 2.அந்த காவலாளிகள் குற்றவாளியின் நண்பர்கள் என்று நான் நினைக்குகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சவிஸ், உன் பதிலில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 21. அறை 2. அந்த திருடன் காவலாகளிடம் மன்னிப்புக் கேட்டிருப்பான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜயஸ்ரீ, உன் பதிலில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு
 22. அறை 2. ஏன் என்றால் இரண்டாம் அறையில் காவலர்கள் இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷாலினி, உன் பதிலில் வாக்கிய அமைப்பில் பிழைகள் உள்ளன. அவற்றைத் திருத்தி மீண்டும் சமர்பிக்கவும்.

   நீக்கு