ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எங்களின் முதல் தமிழ்க் குறும்படம்

‘அவன் என்ன செய்வான்?’

பிளாங்கா ரைஸ் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாகத் தமிழில் ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளது. ‘அவன் என்ன செய்வான்?’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இக்குறும்படம், பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு, உங்கள் பார்வைக்கு இவ்வலைப்பூவில் வைக்கப்படுகிறது.

இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் முடிவினைத் தட்டச்சு செய்து இந்த இடுகையுடன் இணையுங்கள். உங்கள் கற்பனை வளத்தைச் சற்றுத் தட்டி எழுப்புங்களே!

இக்குறும்படத் தயாரிப்பில் உதவிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!


21 கருத்துகள்:

 1. அவன் அந்தப் பணப்பையைத் தன் நண்பனுக்குத் திருப்பிக் கொடுப்பான். யூசுஃப் அவனுக்கு நன்றி கூறுவான். ஆஷிக் தன் நண்பனுக்கு ஒரு நல்ல தோழனாகத் தொடர்ந்து திகழ்வான்.

  பதிலளிநீக்கு
 2. அசினா கதிஜா பின்தி நசீர் (6A)11 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:36

  ஆஷிக் பணப்பையை நண்பனிடம் கொடுத்தான். இரண்டு வெள்ளியையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நன் நிலைமையைக் கூறினான். நண்பன் அவன் மீது பரிதாபப் பட்டு, தன்னிடமிருந்த இரண்டு வெள்ளியைக் கொடுத்தான். மறு நாள் காசை கொடுக்கும் படி கேட்டுக்கொண்டான்.

  பதிலளிநீக்கு
 3. அவன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவான்.அவனுடைய நண்பன் அவனைக் கூப்பிடுவான். அவன் நின்று தன் தவற்றை உணர்ந்து அவன் நண்பனிடம் மன்னிப்பு கேட்பான். அவன் நண்பன் அவனை மன்னிப்பான்.

  பதிலளிநீக்கு
 4. அவன் அந்தப் பணப்பையை அவன் நண்பனிடம் கொடுத்திருப்பான். ஆனால் அவன் பணத்தை மட்டும் எடுத்திருப்பான் என்று நான் நினைக்கிறேன்.நண்பன் அவனிடம் பணத்தை எங்கே என்று கேட்கும்போது,அவன் தான் பார்ககவில்லை என்று சொல்வான் என்று நான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அவன் 'நான் உன்னிடம்தான் கொடுக்க வந்தேன்'என்று கூறுவான்.அவனுடைய நண்பன் அவனை நம்பி விடுவான்.அப்போது, தன் நண்பன் அவனை நம்புகிறான் என்று நினைத்து,இந்தத் தவறான எண்ணத்தை நினைவிலி்ருந்து மறைத்துவிடுவான்.ஆனால்,ஆசிரியரிடம் கோப்பு வாங்காததற்குத் திட்டு வாங்கினான்.

  பதிலளிநீக்கு
 6. அவன் தன் நண்பனிடம் பொய் சொல்லி அந்தப் பணத்தை எடுத்து கோப்பை வாங்குவான். ஆனால் இறுதியில் அவன் பிடிபடுவான்.

  பதிலளிநீக்கு
 7. அவன் பணப்பையை திருப்பி கொடுத்துவிடுவான்.

  பதிலளிநீக்கு
 8. அவனுடைய நண்பன் அவனின் பணப்பையைத் தேடி வரும்பொழுது அவன் அதிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவனிடம் வெறும் பணப்பையை மட்டும் ஒப்படைத்துவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வான்.

  பதிலளிநீக்கு
 9. அவன் அந்தப் பணப்பையை எடுத்து அவன் நண்பனிடம் கொடுக்கவேண்டும் பிறகு,அவன் அவனுடைய நண்பனிடமிருந்து பணம் கேட்டு அவன் வாங்கிக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 10. யூசுஃப் அதைக் கண்டு அவனுடைய பணப்பை எப்படி ஆஷிக்கிடம் வந்தது என்று கேட்பான். ஆஷிக் உண்மையைச் சொல்வான். அதைக் கேட்டு யூசஃப் ஆஷிக்கை மன்னிப்பான். அவர்கள் நண்பர்களாக உணவகத்திற்குச் செல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 11. அவன் அந்தப் பணப்பையை எடுத்தான்.அப்போது அவன் நண்பன் அங்கே வந்து,அங்கே என்ன நடந்தது என்று பார்த்தான்.அவன் அந்தப் பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடி,கட்டுரை கோப்பை வாங்கினான்.அவன் நண்பன் சினம் அடைந்து,ஆசிரியரிடம் கூறினான்.மறுநாள் ஆசிரியர் அவனை கண்டித்தார்.அவன் அவனுடைய நண்பனிடம் மன்னிப்பு கேட்டான்.பிறகு இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

  பதிலளிநீக்கு
 12. அவன் அந்தப் பணப்பையைத் தன் நண்பனிடம் கொடுத்திருப்பான். அவன் தன் நண்பனிடம் சென்று, பணிவாகப் பணம் இரவல் கேட்டு இருக்கலாம். பிறகு, அவன் தன் நண்பனுக்கு நன்றி கூறிவிட்டு, புத்தகக் கடைக்கு சென்று தமிழ் கோப்பு வாங்கியிருக்கலாம். பிறகு, அந்தப் பணத்தை திருப்பித் தந்திருப்பான்.

  பதிலளிநீக்கு
 13. அஷிக் அவனுடைய நண்பனின் பணப்பையை எடுத்து, அவனிடமிருந்து அதை மறைத்து தனக்குத் தேவையான கோப்பை வாங்குவான். ஆனால், அவன் நண்பனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இன்னும் ஆஷிக்கை நம்பிக்கொண்டிருப்பான்.

  பதிலளிநீக்கு
 14. ஆஷிக் தன்னுடைய தவற்றை உணர்ந்தபின் யூசுஃபிடம் அவனுடைய பணப்பையை திரும்பி கொடுத்துவிடுவான். மேலும், அவன் தான் செய்ய முயன்றதை யூசுஃபிடம் கூறுவான். இதற்கு பின் யூசுஃப் தன்னுடைய நண்பன், ஆஷிக்குக்கு அதை செய்வதால் வரும் விளைவுகளைக் கூறுவான்.ஆஷிக் யூசுஃபிடம் மன்னிப்பு கேட்டு மாலையில் தன்னுடைய பணத்தை வைத்தே தனக்கு தேவையான கோப்பை வாங்குவான்.

  பதிலளிநீக்கு
 15. அவன் யூசுஃப்பின் பணப்பையை ஒளித்து வைப்பான். யூசுஃப் ஆஷிக்கிடம்,"நீ என் பணப்பையைப் பார்த்தாயா?" எனக் கேட்பான். அப்போது ஆஷிக்,"நான் பார்க்கவில்லையே?" என்று அவன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவான். பின், உணவத்துக்குச் சென்று அவன் கோப்பு வாங்குவான்.

  பதிலளிநீக்கு
 16. அவன் அவனுடைய பணப்பையைக் கொடுத்திருக்க வேண்டும்.அவன் திருடக்கூடாது.அவன் தன் சொந்த பணத்தில் கோப்பு வாங்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 17. அவன் அந்தப் பணப்பையை எடுத்த போது அதன் உள்ளே இரண்டு வெள்ளி இருந்தது. அவன் அந்தப் பணத்தை வைத்து அந்தக் கோப்பை வாங்கப் போவான் என்று நான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. அவன் அந்தப் பணப்பையை அவனுடைய நண்பனிடம் கொடுப்பான். என்று நான் நினைக்கிறேன்.ஏன்என்றால் அவன் அவனுடைய உண்மையான நண்பன்.அதனால் அவன் எந்த சூழ்நிலையில் இருந்தாலும்,அவன் அப்பணத்தை அவனிடம் கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 19. அவன் அவனுடைய நண்பனின் அந்தப் பணப்பையை எடுத்தபோது இரண்டு வெள்ளியைக் கண்டான். அதை அவன் தன் பணப்பையில் வைப்பான். அவனுடைய நண்பன் வந்ததும் 'எனனுடைய பணப்பையைப் பார்த்தாயா?' என்று அவன் கேட்டான். அதற்கு அவன் நான் பார்க்கவில்லை என்று கூறினான்.சற்று நேரத்தில் அவனுக்கு குற்ற உணர்வு தோன்றவே அவன் நடந்ததைக் கூறி,அவனின் நண்பனிடம் மன்னிப்புக் கேட்டான்.

  பதிலளிநீக்கு
 20. அவன் பணப்பையைத் தன் நண்பனிடம் கொடுத்துவிடுவான். பின், அவன் முகத்தில் சோகம் இருப்பதை அவன் காண்பான். ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று அவன் கேட்க அவன் என்னிடம் கோப்பு வாங்க பணம் இல்லை என்று கூறுவான். கவலைப்படாதே கோப்புக்கு நான் பணம் தருகிறேன் என்பான் அவன். இருவரும் கோப்பு வாங்கி வகுப்பிற்கு விரைந்து செல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 21. உடனே இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படும்.பின்னர் அந்த நாளிலிருந்து இருவரும் சண்டை இட்டு பிரிந்து விடுவர்.

  பதிலளிநீக்கு