வெள்ளி, 15 ஜனவரி, 2010

பாரம்பரிய விளையாட்டுகளை ஒரு கை பார்த்த நம் மாணவர்கள்!

சென்ற திங்கட்கிழமை (11/01/2010),  நமது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு என நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடிப் பார்த்தனர்! அவர்களில் பலருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது இதுவே முதல் முறை!

மாணவர்களின் ஆர்வநிலையும் ஈடுபாடும் இவ்வகுப்பில் நன்கு புலப்பட்டன. அவர்கள் உற்சாகமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு :






















தொடக்கநிலை 5 மாணவர்களே, உங்கள் கருத்துக்களை /  பிரதிபலிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் அவற்றை விளையாடியபோது உங்களுக்கு இருந்த மனநிலை குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம். (Add comments)

8 கருத்துகள்:

  1. யூசுஃப் அஸ்மான் (5A)18 ஜனவரி, 2010 அன்று AM 4:47

    சென்ற திங்கட்கிழமை அன்று நாங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகளில் எனக்கு மிகவும் பிடித்தது சடுகுடு விளையாட்டுத் தான்! அவ்விளையாட்டை நாம் வகுப்பில் விளையாடியபோது என் அணியில் ஐவரும் எதிர் அணியில் ஐவரும் இருந்தனர். முதலில், நான் தான் "சடுகுடு" என்று சொல்லிக் கொண்டே எதிரணியில் புகுந்தேன். அதில் ஆஷிக் என்ற மாணவனை நான் வெளியேறச் செய்தேன். அதனைத் தொடர்ந்து, எதிரணியிலிருந்து வந்த அலி என்ற மாணவன் என்னையும், அனிஸ்ஸையும் வெளியேறச் செய்துவிட்டான். நான் தோல்வியடைந்தாலும், இந்தச் சடுகுடு விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  2. சபின் சாரா (5A)18 ஜனவரி, 2010 அன்று AM 4:54

    சென்ற திங்கட்கிழமை அன்று எங்கள் ஆசிரியர் எங்களுக்குப் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிக் கூறினார். அவர் அவ்விளையாட்டுகள் குறித்துச் சொல்ல சொல்ல எனக்கு அவ்விளையாட்டுகளை விளையாட ஆவலாக இருந்தது. நாம் அன்று விளையாடிய விளையாட்டுகளில் 'கபடி' விளையாட்டும் ஒன்று.

    வகுப்பை இரண்டு குழுக்களாக ஆசிரியர் பிரித்தார். விளையாட்டின் விதிமுறைகளை விளக்கிய பிறகு, சடுகுடு விளையாட்டு தொடங்கியது. எதிரணயிலிருந்து மாணவன் "சடுகுடு" என்று சொல்லிக்கொண்டே என் அணிக்குள் வந்தான். அவன் என் அணியிலிருந்து இருவரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றினான்.

    எனக்கு இந்த விளையாட்டு புதுமையாக இருந்தது. இதனை மீண்டும் விளையாட எனக்கு ஆசையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ரஹ்மான் அலி (5C)18 ஜனவரி, 2010 அன்று AM 10:23

    சென்ற வாரம், எங்கள் தமிழ் வகுப்பின்போது நாங்கள் சில பாரம்பரிய விளையாட்டுகள் குறித்துத் தெரிந்துகொண்டோம். அவற்றில் ஒரு விளையாட்டுத் தான் ‘சடுகுடு’ என்ற விளையாட்டாகும். அந்த விளையாட்டில் பலர் விளையாடலாம். அன்று நம் வகுப்பில் விளையாடியபோது, என் குழுவில் நான், முருகன்வேல், ஆஷிக் மற்றும் சிநேஹா இருந்தோம். எதிரணியில் யூசுஃப், லவின்யா, சபின் மற்றும் அனிஸ் இருந்தார்கள். முதலில் எதிரணியிலிருந்து யூசுஃப் வந்தான். அவன் எனது அணியிலிருந்து அஷிக்கை வெளியாக்கினான். அதன் பிறகு, நான் சென்றேன். என்னைப் பார்த்து எல்லாருமே பயந்தார்கள். நான் மிகவும் வலிமையானவன் என்பதால் அவர்கள் அவ்வாறு பயந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் சென்று அனிஸ் மற்றும் யூசுஃப் ஆகிய இருவரையும் வெளியேற்றிவிட்டு என் அணிக்குத் திரும்பினேன். இந்த விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  4. சென்ற வாரம் தமிழ் வகுப்பில் சில பாரம்பரிய விளையாட்டுகளை நாங்கள் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு பல்லாங்குழியாகும். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு அற்புதமாக இருந்தது. இதனை விளையாடும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. சென்ற திங்கட்கிழமை அன்று தமிழ் வகுப்பில் நானும் என் வகுப்பு மாணவர்களும் சில பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினோம். நாங்கள் விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு பல்லாங்குழியும் ஆடு புலி ஆட்டமும் ஆகும். இவ்விரு விளையாட்டுகளையும் நான் உற்சாகமாக என் வகுப்பு நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. சென்ற வாரம் தமிழ் வகுப்பில் நாங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடு புலி ஆட்டம் ஆகும். அவ்விளையாட்டை விளையாடும்போது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. முருகன்வேல் (5C)18 ஜனவரி, 2010 அன்று AM 10:30

    சென்ற திங்கட்கிழமை அன்று தமிழ் வகுப்பில் நானும் என் வகுப்பு மாணவர்களும் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு பல்லாங்குழியாகும். நான் அதனை என் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடினேன்.

    பதிலளிநீக்கு
  8. சென்ற வாரம், தமிழ் வகுப்பில் நாங்கள் தாயம், பரமபதம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் எனச் சில பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினோம். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கபடி என்ற சடுகுடு விளையாட்டாகும். நான் அதனை என் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடினேன். இவ்விளையாட்டுகளை மீண்டும் ஒரு முறை விளையாட விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு