புதன், 16 ஜனவரி, 2013

பாரம்பரிய விளையாட்டுகள்

சென்ற வியாழக்கிழமை (10/01/2013), தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம், பல்லாங்குழி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிப் பார்த்தனர்! அவர்களில் பலருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது இதுவே முதல் முறை!

மாணவர்களின் ஆர்வநிலையும் ஈடுபாடும் இவ்வகுப்பில் நன்கு புலப்பட்டன. அவர்கள் உற்சாகமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

 
 

 

 

 








தொடக்கநிலை 5 மாணவர்களே, உங்கள் கருத்துக்களை / பிரதிபலிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் அவற்றை விளையாடியபோது உங்களுக்கு இருந்த மனநிலை குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம். (Add comments)

17 கருத்துகள்:

  1. வகுப்பில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஆடு புலி ஆட்டம், தாயம், பரமபதம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடினேன். எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடு புலி ஆட்டம். அதற்குக் காரணம் அதை விளையாடுவதற்குப் புதிதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. முவி்ஃத்(5 topaz)16 ஜனவரி, 2013 அன்று PM 9:02

    வகுப்பில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிய போது எனக்கு உற்சாகமாக இருந்தது. எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடு புலி ஆட்டம்.அதை விளையாடியபோது எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  3. எனக்குப் பிடித்தமான பாரம்பரிய விளையாட்டு தாயம்.அந்த விளையாட்டை விளையாடுவது மிகவும் சுலபம்.அதை விளையாடும்போது மகிழ்ச்சியாக இருந்தது.நான் நிச்சியமாக இந்த விளையாட்டை என் நண்பர்களிடம் பரிந்துரை செய்வேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆரா தில்பர் ( 5 Ruby)16 ஜனவரி, 2013 அன்று PM 9:09

    எனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு ஆடு புலி ஆட்டம். அந்த விளையாட்டை விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நானும் என் தோழியும் அந்த விளையாட்டை உற்சகாத்துடன் விளையாடினோம். அந்த விளையாட்டை விளையாடடிய அனுபவத்தை மறக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. பரமபதம் விளையாட்டு தான் மிகவும் சுலபமான விளையாட்டு என்று நான் நினைக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ஆடுபுலி ஆட்டம்.சிந்தனைத் திறன் வைத்து விளையாடும் விளையாட்டு இது.அதனால் தான் இந்த விளையாட்டு பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  6. விக்னேஷ் (5 Sapphire)16 ஜனவரி, 2013 அன்று PM 9:10

    பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடிபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பரமபதம், ஆடுபுலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி என்ற இந்த நான்கு விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடுபுலி ஆட்டம்.

    பதிலளிநீக்கு
  7. முஹ்சின் (5Ruby)16 ஜனவரி, 2013 அன்று PM 9:11

    வகுப்பில் அந்த நான்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது எனக்குப் பிடித்திருந்தது.இவ்வாறு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது எனக்கு முதல் முறை.எனக்குப் பிடித்தமான விளையாட்டு பரமபதம்.அது ஒரு சவால்மிக்க விளையாட்டு.அதை என்னுடைய குடும்பத்தினரோடு விளையாட ஆசைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கீர்த்தனா(5 Topaz)16 ஜனவரி, 2013 அன்று PM 9:16

    அந்த நான்கு பாரம்பரிய விளையாட்டுகளில் எனக்குப் பிடித்த விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி ஒரு வித்தியாசமான விளையாட்டு.எனக்கு அந்த பாரம்பரிய விளையாட்டை விளையாட வாய்ப்பு கிடைத்தால்,நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வகுப்பில் பாரம்பரிய விளளையாட்டுகளை விளையாடியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்களுடன் சேர்ந்து அந்த விளையாட்டுகளை மகிழ்ச்சியாக விளையாடினேன்.எனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு பரமபதம்.அந்த விளையாட்டில் வெற்றி அடைவதே என் ஆசை.

    பதிலளிநீக்கு
  10. குகன் ராயன்(5Opal)16 ஜனவரி, 2013 அன்று PM 9:16

    எனக்குப் பிடித்த விளையாட்டு ஆடுபுலிஆட்டம்.அந்த விளையாட்டை விளையாடும்போது நிறைய தந்திரங்கைளயும் உத்திகைளயும் தெரிந்திருக்க வேண்டும்.ஆடுபுலிஆட்டம் விளையாடுவது சதுரங்கம் போன்ற விளளையாட்டுகள் விளையாடுவது போலிருந்தது.

    பதிலளிநீக்கு
  11. இந்த விளையாட்டுகளை விளையாடும்போது மகிழ்ச்சியாக இருந்தது.எனக்குப் பிடித்த விளையாட்டு தாயம். அது சவால்மிக்க ஒரு விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  12. எனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு பல்லாங்குழி. அந்த விளையாட்டை விளையாடுவதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. வீட்டில் நனும் என் பாட்டியும் அந்த விளையாட்டை விளையாடுவோம். அந்த விளையாட்டு விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் என் நண்பரக்ளுடன் இந்த விளையாட்டை விளையாடிய அனுபவத்தை மறக்கமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. எனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு ஆடு புலி ஆட்டமும் பரமபதமும் ஆகும்.அந்த விளையாட்டுகளை விளையாடுவதற்கு சுலபமாக இருந்தது.அந்த இரண்டு விளையாட்டுகளையும் என் நண்பர்களுடன் விளையாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  14. எனக்குப் பிடித்த பாரம்பரிய விளையாட்டு தாயம்.தாயம் விளையாடுவதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்களோடு இவ்விளையாட்டை விளையாடிய அனுபவத்தை நான் மறக்க மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  15. க.டிவாஷினி (5 Topaz)16 ஜனவரி, 2013 அன்று PM 9:25

    வகுப்பில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அந்த விளையாட்டுகளை விளையாடியபோது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி விளையாட்டை நான் விரும்பி விளையாடினேன். பல்லாங்குழி ஒரு சுலபமான விளையாட்டு. அந்த விளையாட்டு எல்லாருக்கும் சீக்கிரமாகப் புரிந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  16. வகுப்பில் பாரம்பரிய வினளயாட்டுகனள வினளயாடியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.பரமபதம்,ஆடுபுலி ஆட்டம்,தாயம்,பல்லாங்குழி என்ற இந்த நான்கு வினளயாட்டுகளில் எனக்குப் பிடித்த வினளயாட்டு தாயம். எனக்குத் தாயம் வினளயாட மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  17. நான் அந்தப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அந்த விளையாட்டுகளில் எனக்கு ஆடு புலி ஆட்டம்தான் பிடித்திருந்தது. அது சவால் மிக்க ஒரு விளையாட்டாக இருந்ததால்,அது எனக்குப் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு