ஞாயிறு, 7 அக்டோபர், 2012

நான் படித்த கதை

தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களே!

நீங்கள் படித்த கதையை வலைப்பூவில் பகிர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது! இப்போதே நீங்கள் படித்த கதையைப் பற்றிக் கருத்துத் தெரிவியுங்கள்!

28 கருத்துகள்:

  1. இன்று நான் படித்த ஒரு கதையை உங்களிடம் சொல்லப்போகிறேன். என் கதையின் தலைப்பு தெனாலிராமனின் பூனை. இந்தக் கதை மிகவும் சிரிப்பாக இருக்கும். எனக்குப் பிடித்த கதாபாத்திரம் தெனாலிராமன். ஏனென்றால், அவர் மிகவும் வேடிக்கையானவர். இந்தக் கதையின் மூலம் சில நேரங்களில் ஏற்படும் தவறுகளினால் நன்மையும் ஏற்படும் என்று நான் தெரிந்து கொண்டேன்.
    நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. ஆரா தில்ஃவர் (4O)7 அக்டோபர், 2012 அன்று PM 6:16

    என் பெயர் ஆரா. நான் படித்த கதையின் தலைப்பு மன்னர் விரும்பிய ஆடை. அந்தக் கதையில் ஒரு மன்னரும் இரண்டு தையற்காரர்களும் இருந்தனர் . எனக்குப் பிடித்த கதாபாத்திரம் அந்த இரண்டு தையற்காரர்கள் ஆகும். மன்னருக்கு புதிய ஆடை அணிந்து கொள்ள மிகவும் ஆசை. அந்த இரண்டு தையற்காரர்களும் மன்னருக்கு ஒரு பாடம் புகட்ட எண்ணினர். அவர்கள் மன்னரை ஏமாற்றி அவரை ஆடை இல்லாமல் நகர் வலம் செய்ய வைத்தனர். அதை உணர்ந்த மன்னர் அவமானம் அடைந்தார். இந்தக் கதையிலிருந்து நான் அதிகமாக ஆசைப்படக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. நான் ஒரு கதைப் புத்தகம் படித்தேன். அந்த கதையின் தலைப்பு என்ன அவசரம்?அந்தக் கதையில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் ஒரு குரங்கு. ஒரு குரங்கும் தவளையும் மரத்தடிக்கு விளையாடச் சென்றன. அப்போது மழை பெய்தது. அவை ஒரு வீடு கட்ட முடிவு செய்தன. ஆனால் அவை வீடு கட்டுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தன. அதனால் அடிக்கடி மழையில் நனைந்துகொண்டே இருந்தன. சோம்பேறியாக இருந்தால் கஷ்டப்பட வேண்டும் என்று நான் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. என் பெயர் அஸ்வின். நான் ஒரு கதைப் புத்தகம் படித்தேன். அந்த கதையின் தலைப்பு ஆந்தையும் அன்னமும். கெரைல் என்பவர் தொந்தரவு செய்த ஆந்தையை அம்பு எய்து கொல்ல நினைத்தார். ஆனால் அம்பு குறி தவறி அன்னத்தின் மேல் பட்டது. அன்னம் இறந்ததைக் கண்ட ஆந்தை மிகவும் சோகமாக இருந்தது. இதில் எனக்குப பிடித்த கதாபாத்திரம் ஆந்தை. ஆந்தை செய்யும் குறும்புத்தனம் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அக்பரும் பீர்பாலும் ஆவர். எனக்குப் பிடித்த கதாபாத்திரம் பீர்பால். ஏனென்றால் அவர் மிகவும் கெட்டிக்காரர். எனக்கும் அவரைப் போல் புத்திசாலியாக ஆக ஆசை இருக்கிறது. அவர் செய்யும் செயல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நன்றி வணக்கம்! மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  6. என் பெயர் ஜாஸிம். நான் படித்த கதை அக்பரும் பீர்பலும். எனக்குப் பிடித்த கதாபாத்திரம் பீர்பல். ஏனென்றால் அவர் மிகவும் புத்திசாலி. இந்தக் கதையில் அக்பர் பீர்பலுக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுக்க மறுத்துவிட்டார். அக்பர் ஓர் ஒட்டகத்தைப் பார்த்தார். அதைப்பற்றி பீர்பலிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பீர்பல் சரியான பதிலைக் கூறினார். அதனால் அக்பர் சிரித்துக் கொண்டே பீர்பல் கேட்ட நிலத்தைக் கொடுத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  7. என் பெயர் ஜீவிதா. நான் படித்த கதை `விந்தை உலகில் விமலா’. இந்தப் புத்தகத்தை எழுதியவர் இரா. கமலாதேவி. இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் விமலா, விமலாவின் அக்கா, முயல் ஆகியோர். எனக்குப் பிடித்த கதாபாத்திரம் விமலா. அவளுக்கு ஒரு புதிய இடத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடத்தில் அவளுக்கு ஏற்பட்ட புது அனுபவங்கள் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. எனக்கும் அது போல உலகத்திற்குப் போக ஆசையாக இருக்கிறது. உங்களுக்கு `விந்தை உலகில் விமலா` என்றால் என்ன தெரியுமா? ஆங்கிலத்தில் `ALICE IN THE WONDERLAND’ மீண்டும் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம். என் பெயர் ஜான்சன். நான் படித்த ஒரு கதையைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அந்தக் கதையின் தலைப்பு பயந்தாங்கொள்ளி பாலா. அது ஒரு நகைச்சுவையான கதை. இந்தக் கதையில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். பாலா எப்படி பயம் குறைந்து தைரியமாக மாறினான் என்பதைப் படிக்க சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. என் பெயர் கீர்த்தனா. நான் படித்த கதையின் தலைப்பு ரூபாவும் திராட்சைப்பழமும். இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தக் கதையில் ரூபா என்று ஒரு நரி இருந்தது. ரூபாவுக்கு பசி எடுத்தது. திராட்சைத் தோட்டத்தில் இருந்த பழங்களைத் தின்ன எண்ணியது. திராட்சைப் பழங்கள் உயரமாக இருந்ததால் நரி குதித்து குதித்து பார்த்தது. ஆனால் நரியால் பழங்களைப் பறிக்க முடியவில்லை. இந்தப் பழம் புளிக்கும் என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றது. இக்கதையிலிருந்து நாம் கிடைக்காத ஒரு பொருளுக்கு வருத்தப்பட்டு பயனில்லை என்று தெரிந்துகொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. என் பெயர் அஃபில். நான் படித்த கதையின் தலைப்பு காக்கை கழுகு ஆக முடியாது. அந்தக் கதையின் கதாபாத்திரங்கள் கழுகு, ஆட்டுக்குட்டி, காகம் முதலியவை ஆகும். ஒரு காகம் முட்டாள்தனமாக நடந்து கொண்டது. கழுகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கௌவிப் பிடித்தது. அதைப் பார்த்து காகமும் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடிக்க முயன்றது. ஆனால் அதன் கால்கள் ஆட்டின் தோலில் சிக்கிக் கொண்டதால் ஆடு மேய்ப்பவன் காக்கையைத் தாக்கினான். இந்தக் கதையிலிருந்து பேராசை பெரு நட்டம் என்பதை அறிந்துகொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. என் பெயர் முஃபித். நான் படித்த கதையைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.அந்த கதையின் தலைப்பு யானைகளைக் கொல்லாத குள்ளநரி. கதையின் எனக்கு படித்த கதாபாத்திரம் குள்ளநரியும்,இரண்டு சிங்கக் குட்டிகளும். ஒரு நாள் சிங்கம் குள்ளநரிக் குட்டியைக் கௌவிக் கொண்டு வந்தது. சிங்கங்கள் இரண்டும் குள்ளநரிக் குட்டியைக் தனது மூன்றாவது குழந்தையைப் போலவே வளர்த்தன. வளர்ந்ததும் குள்ளநரி பயந்தாங் கொள்ளியாகி விட்டது. இதைக் கண்ட பெண் சிங்கம் குள்ளநரியை அதன் கூட்டத்தோடு சேர அனுப்பிவிட்டது.

    பதிலளிநீக்கு
  12. என் பெயர் முஹ்சின். நான் ஒரு கதை படித்தேன். அந்தக் கதையின் தலைப்பு கழுதையும் நரியும். அந்த கதையின் கதாபாத்திரங்கள் கழுதையும் நரியும் ஆகும். எனக்குப் பிடித்தமான கதாப்பாத்திரம் கழுதை. அந்தக் கழுதை ஒரு புத்திசாலி. நான் ஒரு கருத்தை இந்தப் புத்தகத்திலிருந்து புரிந்துகொண்டேன். நாம் எப்பொழுதும் ஆபத்தைக் கண்டு பயந்து பின் வாங்கக் கூடாது. அந்த ஆபத்தை வெல்ல வழி தேடினால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. சந்தியா ஷேரன் (4S)7 அக்டோபர், 2012 அன்று PM 6:29

    ஒரு கிராமத்தில் ஒரு அந்தணர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தைகூட இல்லை. அதனால் அவர்கள் சோகமாக இருந்தார்கள் . நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு குழந்தைப் பிறந்தது. அது ஒரு பாம்பாக மாறியது. அந்தணரும் அவர் மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் கதை படிக்க மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் என் பெயர் தாரிக். நான் படித்த கதை புத்தகம் யானையும் எலிக்கூட்டமும். இந்தக் கதையில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் எலிகள். காவலர்கள் யானையை கயிறுகளால் கட்டிப் போட்டனர். எலிகள் யானைக்கு உதவி செய்தன. இந்தக் கதையிலிருந்து நான் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள தாரிக்,

    கதை நன்றாக இருந்தது.எனக்குக் கதை பிடித்திருக்கிறது.

    வஜிதாலி

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள அல்மீரா,

    நல்ல முயற்சி.எனக்கு உன் கதை பிடித்திருக்கிறது.

    யசஸ்வினி

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அஸ்வின்,
    எனக்கு உன் கதை பிடித்திருக்கிறது.
    தேவிகா.

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள அரிஸ்,

    உன் கதையை படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    -கதிஜா-

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள ஜான்சன்,

    அந்த கதை மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

    யாகுப்

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள முஃபித்,

    எனக்கு உன் கதை பிடித்திருக்கிறது.



    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள முஹ்சின்,

    எனக்கு உன் கதை பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ள கடிவாஹினி

    உங்கள் கதை எனக்கு பிடித்திருக்கிறது.



    பதிலளிநீக்கு
  23. அன்புள்ள அஸ்வின்

    எனக்கு உன் கதை பிடித்திருக்கிறது.

    தேவிகா

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள

    உன்னுடைய கதை எனக்குப் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள அரிஸ்,

    எனக்கு உன் கதையை படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    -கதிஜா-

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள் ஐவிதா
    எனக்கு உங்கள் கதை பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. அஃபில்
    கதை நன்றாக இருக்கிறது.
    கதை படிக்க ஆர்வமாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள ஆராதில்,

    எனக்கு உன் கதை பிடித்திருக்கிறது.


    பதிலளிநீக்கு