புதன், 10 நவம்பர், 2010

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு, 04/11/2010 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது படைக்கப்பட்ட அங்கங்கள் அனைத்தும் பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்களும் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!

நிகழ்ச்சியின் முதல் நடனமாகத் தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவிகள் படைத்த நடனம் அனைவரையும் ஈர்த்தது:நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விறுவிறுப்பான ஆட்டம் அனைவரையும் தாளம் போட வைத்தது.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகப் பிற இன ஆசிரியர்கள் வழங்கிய நடனம் அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்தது.
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:


மொத்தத்தில், பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக