புதன், 11 நவம்பர், 2009

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் குதூகலம்!

16/10/2009 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டின. நம் தமிழ் மாணவர்கள் படைத்த கலைநிகழ்ச்சி பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.


நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் படைத்த நடனம் அனைவரையும் ஈர்த்தது:



நிகழ்ச்சியின்போது நம் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளில் பவணி வந்தார்கள். அவர்களின் ஆடை அணிவகுப்பு மண்டபத்தில் இருந்தவர்களின் பலத்த கரவொலியை எழுப்பியது:



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகத் திரு.காலிட் (Mr. Khalid) பாடிய பாடல்கள் அமைந்தன. அவர் வேற்றினத்தவராக இருந்தாலும், தமிழில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். வெளுத்து வாங்கிவிட்டார், திரு. காலிட்!



பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம்முள் ஒளிந்திருக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணர்வதற்கு இந்தத் தீபாவளிக் கலைநிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக