வியாழன், 10 செப்டம்பர், 2009

கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற கட்டுரைகள்

தொடக்கநிலை 5
ஆபத்தில் கைகொடுப்போம்

அன்று சூரியன் தன் பணியை முடித்துக் கொண்டு மறைந்து கொண்டிருந்தான். நானும் என் பெற்றோரும் மருத்துவமனையில் ‘அவசர சிகிச்சைப் பிரிவு’ பகுதியில் நின்றுக்கொண்டிருந்தோம். எனது இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. பயத்தால் என் உடம்பெல்லாம் கிடு கிடுவென நடுங்கின. அப்பொழுது, என் எண்ண அலைகள் பின்னோக்கிச் செல்லத் தொடங்கின.

நானும் எனது பெற்றோரும் பறவைகள் பூங்காவிற்கு வண்டியில் சென்று கொண்டிருந்தோம். அப்போது, சாலையின் முற்ச்சந்திப்பில் யாரோ ஒரு மனிதர் மயங்கி கிடந்தது போல் தெரிந்தது. உடனே, நாங்கள் வண்டியை நிறுத்தி விரைந்து அங்கு சென்றோம். அங்கே ஒரு வயதான முதியவர் முட்டியில் அடிபட்டு இரத்தம் கசிய மயங்கிக் கிடந்தார். உடனே நாங்கள் செய்வதறியாது திகைத்தோம். யாருமே, அவருக்கு உதவி செய்ய முன்வராமல், பார்த்தும் பார்க்காததும் போல சென்றனர். அது மனித நேயமற்ற செயல் அல்லவா?

எனவே, நாங்கள் உடனே அந்த முதியவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமெனத் தீர்மானித்தோம். என் தந்தை மருத்தவமனைக்குத் தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் மருத்தவ வண்டி வந்தது. அதற்குள் நாங்கள் அவருக்குக் கட்டுப்போட்டு முதலுதவி செய்தோம். பின் மருத்துவ வண்டி முதியவரைக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த முதியவருக்கு அவரது தகவல்கள் தெரியாததால் நாங்களும் உடன் செல்லவேண்டியதாயிற்று.

அப்பொழுது என் தாயார் என்னை அழைத்தாள். அம்முதியவர் இப்பொழுது நலமாக இருப்பதாகக் கூறினார். நான் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்.


சரண்யா
5D


தொடக்கநிலை 6
பணம் எங்கே?

அன்று சனிக்கிழமை. கதிரவன் தன் கடமையை ஆற்ற வானில் பிரகாசமாக உதித்தான். திரு. ரவி தன் மனைவியுடன் பேரங்காடிக்குச் சென்றார். அவர்கள் இருவரும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினர். பொருள்கள் நிறைய இருந்ததால் அவர்கள் ஒரு தள்ளுவண்டியைப் பயன்படுத்தினர். அவர்கள் வாடகை உந்துவண்டி நிறுத்தத்திற்குச் சென்றனர். அவர்கள் மின்படிக்கட்டு வழியே செல்ல நேர்ந்தது. அப்போது திரு. ரவி கால் இடறித் தடுக்கி விழுந்தார்.

தள்ளுவண்டியில் உள்ள அனைத்துப் பொருள்களும் கீழே விழுந்து சிதறின. பக்கத்தில் இருந்த பழவியாபாரிகள் தங்களுடைய கடைகளிலிருந்து ஓடி வந்து திரு. ரவிக்கு உதவினர். அவர் மனைவி அவரைத் தூக்கிவிட்டார். உதவி செய்த பழக்கடை வியாபாரிகளிடம் நன்றி கூறிவிட்டுத் திரு. ரவியும் அவர் மனைவியும் வாடகை உந்துவண்டி நிறுத்தத்திற்குச் சென்றனர்.
அப்போதுதான் திரு. ரவி தன் பணம் தொலைந்துவிட்டதை உணர்ந்தார். அது அவர் சட்டைப் பையில் காணவில்லை. அவருக்குப் பதற்றம் உண்டாயிற்று. பணம் இல்லாவிட்டால் வீட்டை அடையமுடியாது. பிறகு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் வேளையில், ஒரு ஆடவர், "நில்லுங்கள்! நில்லுங்கள்! " என்று கத்திக்கொண்டே திரு. ரவியையும் அவர் மனைவியையும் நோக்கி ஓடி வந்தார்.

"இது உங்களது பணமா? நீங்கள் கீழே விழுந்தபோது இது விழுந்திருக்கலாம்," என்று கூறினார். அது தன் பணம்தான் என்று உணர்ந்ததும் திரு. ரவி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அந்த ஆடவரின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு நன்றி கூறிய பிறகு இருவரும் வீடு திரும்பினர்.


ச. ஸந்தியா
6A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக