வெள்ளி, 1 அக்டோபர், 2010

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

தொடக்கநிலை 6 மாணவர்கள்

படத்தில் (பின் வரிசை - இடதிலிருந்து வலம்):
சௌந்தர்யா, ஃபாஸ்தினா, நிவாஷினி, அனிதா, ஷஹிரா, இர்ஃபான், முபாரக், கணேஷ், அமிருள்

படத்தில் (முன் வரிசை - இடதிலிருந்து வலம்):
ஜஸ்மினா, முனீரா, ஐநூன், ஷஹிடா, அர்ஷாத், அலீஃப், தௌஃபிக்

படத்தில் இடம்பெறாதவர்கள்:
அசினா, அயிஷா, யுவநித்தியா, ஹஃபிஸி, நேதாஜி


தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புதான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

எங்கள் மாணவச் செல்வங்களுக்குத் தமிழாசிரியர்கள் ஐவரின் இதயங்கனிந்த சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

நண்பனே! எனது உயிர் நண்பனே!

'நண்பன்' என்னும் தலைப்பில் தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் சுயமாக எழுதிய கவிதைகளும், பாடிய பாடல்களும் இதோ உங்களுக்காக. கேட்டு மகிழுங்கள்!

யூசுஃப் (5A) :




Click here to listen in Windows Media Player

ஆஷிக் (5A) :




Click here to listen in Windows Media Player

மிர்சான் (5A) :




Click here to listen in Windows Media Player

பாத்திமா (5B) :




Click here to listen in Windows Media Player


ஷாஃபிஸ் (5B) :





Click here to listen in Windows Media Player


லவின்யா (5C) :






Click here to listen in Windows Media Player

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தேசிய தின வாழ்த்துகள்!

வரும் திங்கட்கிழமை (09/08/10), நம் தேசத்தின் 45-வது பிறந்தநாள்! அனைவருக்கும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ் மொழிப் பிரிவினரின் இனிய தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

மாணவர்களே, கிடைத்திருக்கும் இந்த நீண்ட விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிடுங்கள்!

புதன், 4 ஆகஸ்ட், 2010

பாடுவோம் வாருங்கள்!




வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு.

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.
வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.


தேசிய தினக் குதூகலம்

சென்ற மாதம் தொடக்கநிலை 5 மாணவர்கள் பாடாங் அரங்கில் நடைபெற்ற தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்கள். அதனைப் பற்றி,  மாணவர்கள் தமிழ் வகுப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.

அவர்கள் எழுதிய கட்டுரைகளில் சிறந்த இரண்டு கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு....

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நம் நாட்டுக் கொடியை அறிவோமா?


நம் நாட்டுக் கொடி சிவப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் அமைந்திருக்கிறது. கொடியின் மேல் பகுதி சிவப்பு, கீழ்ப்பகுதி வெள்ளை. நம் நாட்டு மக்களின் நட்பு மனப்பான்மையையும் சகோதரத்துவத்தையும் சிவப்பு நிறம் குறிக்கிறது. மக்களிடத்தில் உள்ள தூய்மையான சீரிய பண்பினை வெள்ளை நிறம் குறிக்கிறது. கொடியின் மேல் பகுதியில், கொடிக் கம்பத்தின் அருகே ஓர் இளம்பிறையும் அதைச் சுற்றி ஐந்து விண்மீன்களும் உள்ளன. இளம் நாடொன்று ஐந்து குறிக்கோள்களான மக்களாட்சி (ஜனநாயகம்), அமைதி, முன்னேற்றம, நீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கிச் செல்வதை அவை குறிக்கின்றன.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

விடுமுறைக்கான விடுகதைகளும் அதன் பதில்களும்

மாணவர்களே இதோ விடுமுறையில் கேட்கப்பட்ட விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. உயிர்வாழ உதவும் நண்பன்; உலகமெல்லாம் உலவுகிறான். அவன் யார்?
(1) உயிர்
(2) காற்று
(3) புத்தகம்


2. கிளையில்லாத மரம் வெட்ட வெட்ட வளரும்? அது என்ன?
(1) தென்னை
(2) சிரிப்பு
(3) தலைமுடி

3. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
(1) மிளகாய்
(2) நாக்கு
(3) எலும்பு

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
  1. சபின் (5A)
  2. பாத்திமா (5B)
  3. ஷாஃபிஸ் (5B)
மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இம்மூன்று மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!

வியாழன், 27 மே, 2010

விடுமுறைக்கான விடுகதைகள்! கண்டுபிடி! கண்டுபிடி!

மாணவர்களே, இதோ உங்களுக்காக மூன்று புதிய விடுகதைகளுடன் மீண்டும் வந்துவிட்டது, 'கண்டுபிடி! கண்டுபிடி!' அங்கம்.

பின்வரும் விடுகதைகளுக்கு உங்கள் பதில்களை இப்போதே நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

1. உயிர்வாழ உதவும் நண்பன்; உலகமெல்லாம் உலவுகிறான். அவன் யார்?
(1) உயிர்
(2) காற்று
(3) புத்தகம்


2. கிளையில்லாத மரம் வெட்ட வெட்ட வளரும்? அது என்ன?
(1) தென்னை
(2) சிரிப்பு
(3) தலைமுடி

3. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
(1) மிளகாய்

(2) நாக்கு
(3) எலும்பு

இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! இம்மாதம் யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

புதன், 26 மே, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாழ்த்துப்பாடலின் படச்சுருள்

அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாழ்த்துப்பாடலின் படச்சுருள் இது.
பார்த்து, ரசித்து, கேட்டு மகிழுங்கள்!