வியாழன், 4 பிப்ரவரி, 2010

'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு'

இவ்வலைப்பூவில் அண்மையில் 'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு' என்ற வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அதில் தொடக்கநிலை 5 மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு வாக்களித்தார்கள்.


தங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாகப் பல மாணவர்கள்  சடுகுடு/கபடி விளையாட்டுக்கே வாக்களித்திருந்தார்கள். அவ்வகுப்பு மாணவர்களில் பலரையும் அவ்விளையாட்டு வெகுவாகக் கவர்ந்தது எனலாம். அவ்விளையாட்டை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடியபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு....

புதன், 20 ஜனவரி, 2010

கண்டுபிடி! கண்டுபிடி! பதில்களைக் கண்டுபிடி!

மாணவர்களே, பின்வரும் விடுகதைகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

இம்மாத விடுகதைகளை வழங்கிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!

விடுகதைகள்

1. அண்ணனுக்கு ஒட்டாது தம்பிக்கு ஒட்டும். அது என்ன?

(1) முதுகு
(2) உதடுகள்
(3) கண்ணிமைகள்


2. பகலில் சுருண்டு இருப்பான். இரவில் விரிந்திருப்பான். அவன் யார்?

(1) கால்
(2) நிலவு
(3) பாய்


3. கை உண்டு கால் இல்லை. உடல் உண்டு தலை இல்லை. அது என்ன?
 
(1) நிழல்
(2) கடிகாரம்
(3) சட்டை
 
 
இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

வெள்ளி, 15 ஜனவரி, 2010

பாரம்பரிய விளையாட்டுகளை ஒரு கை பார்த்த நம் மாணவர்கள்!

சென்ற திங்கட்கிழமை (11/01/2010),  நமது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு என நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடிப் பார்த்தனர்! அவர்களில் பலருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது இதுவே முதல் முறை!

மாணவர்களின் ஆர்வநிலையும் ஈடுபாடும் இவ்வகுப்பில் நன்கு புலப்பட்டன. அவர்கள் உற்சாகமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு :






















தொடக்கநிலை 5 மாணவர்களே, உங்கள் கருத்துக்களை /  பிரதிபலிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் அவற்றை விளையாடியபோது உங்களுக்கு இருந்த மனநிலை குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம். (Add comments)

செவ்வாய், 5 ஜனவரி, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இனிய நினைவுகளுடன் 2009-ஆம் ஆண்டு முடிவுபெற்றது.

புதிய உத்வேகத்துடன் 2010-ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் என உங்கள் உள்ளங்களில் பற்பல இலக்குகள் புதிய ஆண்டில் உதித்திருக்கும். 

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!

திங்கள், 4 ஜனவரி, 2010

பாடலைக் கேட்டு வரிகளை நிரப்புக!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,
பின்வரும் பாடல் பகுதியைக் கேளுங்கள். பாடலைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளில் உள்ள கோடிட்ட இடங்கள் ஒவ்வொன்றையும் சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

முடித்த பயிற்சித்தாளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 25 ஜனவரி 2010, திங்கட்கிழமை
தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மலர்கள் மாணவர்களே,
நீங்கள் கேட்ட பாடல் கூறும் கருத்துக்கள் குறித்தும் இப்பாடலைக் குறித்த உன்  சிந்தனைகள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன். அவற்றைத் தொகுத்து ஒரு கடிதமாக ('எழுதுகிறேன் ஒரு கடிதம்')  எனக்கு எழுதவும். கடிதத்தின் தலைப்பாக 'உன்னை அறிந்தால் பாடல் பற்றிய என் கருத்துக்கள்' என்பதை எழுதிட மறவாதீர்.  உன் கடிதம் 1 1/2 பக்கத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

கடிதத்தை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 25 ஜனவரி 2010, திங்கட்கிழமை

புதன், 9 டிசம்பர், 2009

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின!

26/11/2009 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் மிக ஆர்வத்துடன் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தலை சிறந்த மாணவர் அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றதோடு, 273 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!


இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியிலும் சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், சிறப்புத் தேர்ச்சி விகிதத்தில் தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துக்கள்!

மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.


புதன், 18 நவம்பர், 2009

நவம்பர் மாதச் சிந்தனை உங்களுக்காக

நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயா?
பொறுமை கடலினும் பெரிது.
அப்படியென்றால் நேரத்தை வீணாக்காதே
ஏனெனில் வாழ்க்கையின் மூலதனமே நேரந்தான்.
                                                                       - மேல்நாட்டு அறிஞர் ஒருவர்

தேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட தமிழாசிரியர்கள் எங்கள் ஐவரின் இனிய நல்வாழ்த்துக்கள்! 

செவ்வாய், 17 நவம்பர், 2009

வெற்றி நிச்சயம். இது வேதத் தத்துவம்!

இவ்வாண்டு நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 16/11/2009 அன்று பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் வெற்றிக் கோப்பைகளுடன்:

போட்டிகளில் வெற்றிபெற்ற தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள்:

கதை சொல்லும் போட்டி வெற்றியாளர்கள்:















சொற்கள் உருவாக்கும் / கட்டுரை போட்டி வெற்றியாளர்கள்:















போட்டிகளில் வெற்றிபெற்ற தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள்:

கதை சொல்லும் போட்டி வெற்றியாளர்கள்:















கட்டுரை போட்டி வெற்றியாளர்கள்:















போட்டிகளில் வெற்றி பெற்ற தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள்:

பேச்சு / கட்டுரை போட்டி வெற்றியாளர்கள்:





 
 
 
 
 
 
 
 
 
 
 
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 12 நவம்பர், 2009

இம்மாத விடுகதை

பள்ளி விடுமுறைக்கு முன், இதோ உங்களுக்காக வந்துவிட்டது, இம்மாத விடுகதை.

கிளை இல்லாத மரம்
வெட்ட வெட்ட வளரும்.
அது என்ன?


கண்டுபிடியுங்கள்! கண்டுபிடியுங்கள்!

புதன், 11 நவம்பர், 2009

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் குதூகலம்!

16/10/2009 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டின. நம் தமிழ் மாணவர்கள் படைத்த கலைநிகழ்ச்சி பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.


நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் படைத்த நடனம் அனைவரையும் ஈர்த்தது:



நிகழ்ச்சியின்போது நம் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளில் பவணி வந்தார்கள். அவர்களின் ஆடை அணிவகுப்பு மண்டபத்தில் இருந்தவர்களின் பலத்த கரவொலியை எழுப்பியது:



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகத் திரு.காலிட் (Mr. Khalid) பாடிய பாடல்கள் அமைந்தன. அவர் வேற்றினத்தவராக இருந்தாலும், தமிழில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். வெளுத்து வாங்கிவிட்டார், திரு. காலிட்!



பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம்முள் ஒளிந்திருக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணர்வதற்கு இந்தத் தீபாவளிக் கலைநிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!