ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தமிழ் மொழி மாதம் தொடங்கிவிட்டது!

01 ஏப்ரல் 2012 தொடக்கம் 29 ஏப்ரல் 2012 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.thangameen.com/tmvizha என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல், இவ்வாண்டு 09 ஏப்ரல் தொடக்கம் 20 ஏப்ரல் வரை பள்ளியில் இருவாரத் தமிழ் மொழி கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதனை முன்னிட்டு, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இந்த வலைப்பூவில் விரைவில் காணலாம்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக