புதன், 20 ஜனவரி, 2010

கண்டுபிடி! கண்டுபிடி! பதில்களைக் கண்டுபிடி!

மாணவர்களே, பின்வரும் விடுகதைகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

இம்மாத விடுகதைகளை வழங்கிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!

விடுகதைகள்

1. அண்ணனுக்கு ஒட்டாது தம்பிக்கு ஒட்டும். அது என்ன?

(1) முதுகு
(2) உதடுகள்
(3) கண்ணிமைகள்


2. பகலில் சுருண்டு இருப்பான். இரவில் விரிந்திருப்பான். அவன் யார்?

(1) கால்
(2) நிலவு
(3) பாய்


3. கை உண்டு கால் இல்லை. உடல் உண்டு தலை இல்லை. அது என்ன?
 
(1) நிழல்
(2) கடிகாரம்
(3) சட்டை
 
 
இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

வெள்ளி, 15 ஜனவரி, 2010

பாரம்பரிய விளையாட்டுகளை ஒரு கை பார்த்த நம் மாணவர்கள்!

சென்ற திங்கட்கிழமை (11/01/2010),  நமது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு என நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடிப் பார்த்தனர்! அவர்களில் பலருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது இதுவே முதல் முறை!

மாணவர்களின் ஆர்வநிலையும் ஈடுபாடும் இவ்வகுப்பில் நன்கு புலப்பட்டன. அவர்கள் உற்சாகமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு :






















தொடக்கநிலை 5 மாணவர்களே, உங்கள் கருத்துக்களை /  பிரதிபலிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் அவற்றை விளையாடியபோது உங்களுக்கு இருந்த மனநிலை குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம். (Add comments)

செவ்வாய், 5 ஜனவரி, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இனிய நினைவுகளுடன் 2009-ஆம் ஆண்டு முடிவுபெற்றது.

புதிய உத்வேகத்துடன் 2010-ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் என உங்கள் உள்ளங்களில் பற்பல இலக்குகள் புதிய ஆண்டில் உதித்திருக்கும். 

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!

திங்கள், 4 ஜனவரி, 2010

பாடலைக் கேட்டு வரிகளை நிரப்புக!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,
பின்வரும் பாடல் பகுதியைக் கேளுங்கள். பாடலைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளில் உள்ள கோடிட்ட இடங்கள் ஒவ்வொன்றையும் சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

முடித்த பயிற்சித்தாளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 25 ஜனவரி 2010, திங்கட்கிழமை
தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மலர்கள் மாணவர்களே,
நீங்கள் கேட்ட பாடல் கூறும் கருத்துக்கள் குறித்தும் இப்பாடலைக் குறித்த உன்  சிந்தனைகள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன். அவற்றைத் தொகுத்து ஒரு கடிதமாக ('எழுதுகிறேன் ஒரு கடிதம்')  எனக்கு எழுதவும். கடிதத்தின் தலைப்பாக 'உன்னை அறிந்தால் பாடல் பற்றிய என் கருத்துக்கள்' என்பதை எழுதிட மறவாதீர்.  உன் கடிதம் 1 1/2 பக்கத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

கடிதத்தை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 25 ஜனவரி 2010, திங்கட்கிழமை